சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தில் என்னை மாதிரி...பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்
அமரன் படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

அமரன்
சிவகார்த்திகேய்ன நடித்த அமரன் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியானது . கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படத்தை இயக்கினார் ராஜ்குமார் பெரியசாமி. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் அவரது மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்திருந்தார். தமிழ் , தெலுங்கு, இந்தி , மலையாளம் என அமரன் திரைப்படம் அனைத்து மொழிகளிலும் பெரியளவில் வெற்றிபெற்றது. உலகளவில் இப்படம் 350 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமரன் திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் 100 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி பாராட்டி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயன் பற்றி கமல்ஹாசன்
"சிவகார்த்திகேயன் நன்றாக நடித்து வருகிறார். ஆனால் தனது வீடு கட்டியது போக தான் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் போடுகிறார் என்று தெரிந்தபோது தான் இவர் என் அலை வரிசை உள்ள ஆள் என்று தெரிந்துகொண்டேன். " என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Kamal ayya 😌💥
— Priya Sk (@Sivaannafanpri2) February 14, 2025
That smile 🥰#Sivakarthikeyan annae pic.twitter.com/DVnurDldaW
நடிப்பு தவிர்த்து சிவகார்த்திகேயன் எஸ்.கே ப்ரோடக்ஷன் வழியாக பல படங்களை தயாரித்து வருகிறார். வாழ் , கனா , குரங்கு பெடல் சமீபத்தில் வெளியான கொட்டுக்காளி ஆகிய படங்களை இதுவரை அவர் தயாரித்துள்ளார். அதிகம் கவனம் பெறாத தனித்துவமான கதை சொல்லும் இயக்குநர்களை அடையாளப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் லாபம் சம்பாதிப்பது தனது முதன்மையான நோக்கம் இல்லை என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

