Watch Video: மகாராஜா இயக்குநர் நித்திலன் ஒரு ஜீனியஸ்.. அன்றே கணித்த கமல்ஹாசன்.. வைரல் வீடியோ!
Kamal Haasan Praising Nithilan Swaminathan: மகாராஜா படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனை உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஜா
விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா (Maharaja) படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி, பாரதிராஜா, நட்டி, முனிஷ்காந்த், அருள்தாஸ், சிங்கம் புலி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம், ரசிகர்களிடம் பாராட்டுக்களையும் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இப்படத்தின் மூலம் வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன்.
யார் இந்த நித்திலன் சுவாமிநாதன்
கடந்த 2017ஆம் ஆண்டு பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த குரங்கு பொம்மை படம் வெளியானது. வெறும் 1 மணி நேரம் 40 நிமிடங்களே நீளம் கொண்ட இந்தப் படம் முதலில் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டவர் நித்திலன் சுவாமிநாதன். இவர் முன்னதாக நாளைய இயக்குநர் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். இதில் இறுதிச் சுற்றில் இவர் இயக்கிய “புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்” என்ற படம் நாளைய இயக்குநர் டைட்டில் பரிசை வென்றது.
இந்த விருதை அவருக்கு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இருவரும் இணைந்து வழங்கினார்கள். மேலும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் நிதிலன் இயக்கிய இந்தப் படத்தைக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கமல்ஹாசன் “எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் இந்த இளைஞர் இப்படியான ஒரு படத்தை எடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
மகாராஜா பட இயக்குநரை கமல்ஹாசன் பாராட்டியுள்ள இந்தப் பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thanks for believing in me @ikamalhaasan sir.. 🙏🙏🙏
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 16, 2024
whenever I see this.. it gives me hope and motivation..#Maharaja#VJS50 https://t.co/0SBHLWrij4
மகாராஜா படத்தைப் பார்த்த தமிழ் திரைப் பிரபலங்கள் இயக்குநர் நித்திலனுக்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்த் வருகிறார்கள். இயக்குநர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் , கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் மகாராஜா படத்தைப் பாராட்டியுள்ளார்கள்.
மேலும் படிக்க : Unni Mukundan : உன்னி முகுந்தன் நடிக்கும் மார்கோ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!