நீங்க பண்ணா காமெடி நாங்க பண்ணா கடுப்பாகுதா...கரூர் சர்ச்சையில் ஜீவாவின் பழைய வீடியோவை கிண்டிய நெட்டிசன்ஸ்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தனது படத்தில் கேலியாக வசனம் பேசிய நடிகர் ஜீவாவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ஜீவாவின் பழைய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது

கடந்த ஆண்டு ஜீவா தனது குடும்பத்துடன் சென்ற கார் விபத்திற்கு உள்ளானபோது செல்ஃபீ எடுக்க வந்தவரிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார். இந்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள் தனது குடும்பம் பிரச்சனையில் இருந்தபோது கோபபட்ட ஜீவா 41 பேர் உயிரிழந்த விஷயத்தில் காமெடி செய்வது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி பொங்கல் வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கரூர் விபத்து ஏற்பட்டபோது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசிய 'கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா" காமெடி வசமாக இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் திரையரங்கில் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் படத்திற்கு ப்ரோமோஷனுக்காக சென்ற இடங்களிலும் இதே வசனத்தை பேசி வருகிறார். 41 பேர் உயிரிழந்த நிகழ்வை வைத்து காமெடி செய்வது முதிர்ச்சியற்ற செயல் என ஜீவாவிற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்
https://tamil.abplive.com/web-stories/entertainment/most-anticipated-movies-of-2026-246825
வைரலாகும் ஜீவா விபத்து வீடியோ
இந்த நிகழ்வுடன் ஜீவாவின் பழைய விபத்து வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜீவா தனது மனைவியோடு சென்றபோது அவரது கார் விபத்திற்குள்ளானது. சேதமடைந்த காருடன் நின்றிருந்த ஜீவாவை பொதுமக்கள் சூழந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஜீவாவிடம் செல்ஃபீ கேட்க " இங்க என்ன பிரச்சன நடந்திருக்கு _____ மாதிரி பேசிட்டு இருக்க" என்று அந்த நபரை திட்டினார் ஜீவா. இந்த நிகழ்வினை சுட்டிகாட்டி உங்க குடும்பம் பிரச்சனையில் இருந்தபோது கோபப்படும் நீங்கள் 41 உயிர்கள் இறந்த நிகழ்வை உங்கள் படத்தில் நகைச்சுவையாக்கி இருக்கிறீர்கள். எடுத்தது மட்டுமில்லாமல் இதை பொழுதுபோக்கிற்காக செய்ததாகவும் யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் சொல்வது எந்த அளவிற்கு நியாயம் என ஜீவாவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்
Six months ago, actor #Jiiva was involved in a car accident. At that time, someone asked Jiiva for a selfie, and Jiiva angrily responded, “யோவ் மயிரு மாதிரி பேசிட்டு இருக்க . Accident ஆகிருக்க டைம்ல” He spoke that way because Jiiva’s family was inside the car.
— Spicy Chilli (@SpicyChilli4U) January 18, 2026
Now, the same… pic.twitter.com/SMHXB14CGa





















