மேலும் அறிய

20 Years of Jayam: எதிர்பார்ப்பே இல்லாமல் ரிலீஸ்.. குவிந்த மக்கள் கூட்டம்.. 20 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ஜெயம்’

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரின் முதல் படமாக ஜெயம் 2003 ஆம் ஆண்டு இதே தேதியில் வெளியாகியிருந்தது. 

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரின் முதல் படமாக ஜெயம் 2003 ஆம் ஆண்டு இதே தேதியில் வெளியாகியிருந்தது. 

எதிர்பார்ப்பே இல்லாத படம் 

2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ படத்தின் ரீமேக் தான் தமிழிலும் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு சினிமாவின் பிரபல எடிட்டர், தயாரிப்பாளராக இருந்த எடிட்டர் மோகனின் இரு மகன்களான ராஜா மற்றும் ரவி இப்படத்தில் வாரிசு பிரபலங்களாக அடியெடுத்து வைத்தனர். ராஜா இப்படத்தை இயக்கிய நிலையில் ரவி ஹீரோவாக அறிமுகமானார். ஜெயம் படத்தில் ஹீரோயினாக சதா அறிமுகமாகியிருந்தார். மேலும்  கோபிசந்த் , ராஜீவ் , பிரகதி, நிழல்கள் ரவி , நளினி , செந்தில் , சுமன் செட்டி , மற்றும் ரமேஷ் கண்ணா ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் விருது வென்ற மரகதமணி (ஆர்.பி.பட்நாயக் என்ற பெயரில்) இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

பரிதாபத்தை ஏற்படுத்திய காட்சிகள் 

கல்லூரியில் படிக்கும் சதாவுக்கு ஜெயம் ரவி மீது ஒரு சந்தர்ப்பத்தில் காதல் ஏற்படுகிறது. அதேசமயம் வீட்டில் சிறுவயதில் சதாவுக்கு, கோபிசந்திற்கும் பிற்காலத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். சிறுவயது பிரச்சினையால் சதாவை பார்க்காமல் இருக்கும் எதிர்மறை குணங்கள் கொண்ட கோபி சந்த் பல ஆண்டுகளுக்குப் பின் அவரைப் பார்த்தவுடன் திருமணம் செய்ய நினைக்கிறார். ஜெயம் ரவி காதல் நிறைவேறியதா? கோபி சந்தின் ஆசை  நிறைவேறியதா? என்பதே இப்படத்தின் கதையாகும். 

திரைக்கதையில் இரத்தம் சொட்ட கோபிசந்திடம் ஜெயம் ரவி அடிவாங்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டிருந்தது. இது சாதாரண ரவியை ‘ஜெயம்’ ரவியாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. மேலும் இந்த படத்திற்கு பாடல்கள் மிகப்பெரிய பலமாக அமைந்தது. இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட் படமாகவும் இது அமைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 25 கோடி வசூல் செய்து வணிக ரீதியாக வெற்றி பெற்றது. 

இந்த படம் ரிலீஸான சமயத்தில் முதல் வாரம் பெரிய அளவில் ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை. ஆனால் ஊடகங்களில் வெளியான விமர்சனம், படம் பார்த்தவர்கள் சொன்ன பாசிட்டிவ் கருத்துகள் காரணமாக குடும்பம் குடும்பமாக இப்படத்திற்கு ரசிகர்கள் வருகை தந்தனர். 

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget