HBD Jayam Ravi: உதவி இயக்குநர் to நடிகர்...தமிழ் சினிமாவின் 'தனி ஒருவன்' ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்..!
பிற நடிகர்களைப் போல ஜெயம் ரவியின் திரைவாழ்விலும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்துள்ளன. ஆனால் ஆபாசம். அதீத வன்முறை போன்ற காட்சிகள் இருந்ததில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ஜெயம் ரவி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தொட்டதெல்லாம் ஜெயமே...!
2003 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படம் வெளியாகியிருந்தது. ரவின்னு ஒரு பையன் சூப்பரா நடிச்சிருக்கான்னு படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, ரவி...”ஜெயம் ரவி” ஆகியிருந்தார். 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி பிறந்த அவர், அடிப்படையிலேயே திரைத்துறைச் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அப்பா மோகன் திரைப்படப் படத்தொகுப்பாளரும் தயாரிப்பாளரும் ஆவார். 12 வயதில் முறைப்படி பரதம் கற்று, சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும், மும்பையில் உள்ள பயிற்சி மையத்தில் முறைப்படி நடிப்பும் கற்றவர்.
View this post on Instagram
நாம் அனைவருமே ஜெயம் ரவியின் சினிமா பயணம் ஹீரோவாக தொடங்கியது என நினைக்கிறோம். ஆனால் அவர் கமல் நடித்த ஆளவந்தான் படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜெயம் படத்தை தொடர்ந்து வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, மழை, தாஸ், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
இதில் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்கள் அவரை பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் கொண்டு சேர்த்தது. நடிப்பு, நடனம் என ஜெயம் ரவிக்கு அவரது உயரம் கூட பிளஸ் ஆக அமைந்தது. தீபாவளி படத்தில் வடசென்னை இளைஞர், பேராண்மை படத்தில் பழங்குடியின இளைஞர், ஆதி பகவன் படத்தில் பெண் தன்மை மிக்க வில்லன், நிமிர்ந்து நில் படத்தில் ஊழலை எதிர்த்து போராடும் இளைஞர், வனமகன் படத்தில் ஆதிவாதி இளைஞர் என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி வந்தார்.
அடையாளமாக மாறிய 'தனி ஒருவன்'
அதுவரை அண்ணன் இயக்கத்தில் நடித்த ஜெயம், எம்.குமரன், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி ஆகிய 5 படங்களும் ரீமேக் படங்களாக அமைய, முதன்முதலாக மோகன் ராஜா நேரடி தமிழ் படம் ஒன்றை இயக்கினார். அதுதான் “தனி ஒருவன்”. கடந்த 10 ஆண்டுகளில் ஜெயம் ரவியின் அடையாளமாக இருப்பதும் இந்த படம் மட்டும் தான். அந்த அளவுக்கு இந்த சகோதரர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான பெருமைக்குரிய படமாக அப்படம் அமைந்தது.
ஆனாலும் கமர்ஷியல் பக்கம் நின்று வித்தியாசமான முயற்சியை தொடர்ந்து கையாள தொடங்கினார். பூலோகத்தில் குத்துச்சண்டை வீரராகவும், டிக் டிக் டிக் படத்தில் விண்வெளி வீரராகவும், கோமாளி படத்தில் 15 ஆண்டுகள் கோமாவில் இருந்து மீண்ட நபராகவும் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார். இதனால் ஜெயம் ரவி படம் என்றாலே ரசிகர்கள் எந்த வித யோசனையும் செய்யாமல் தியேட்டருக்கு வருகிறார்கள்.
#HBDJayamRavi #HappyBirthdayJayamRavi #Jayamravi@actor_jayamravi na
— ஜெயம் Aravinthan (@Aravinthansund1) September 10, 2022
Theni dt jr fans@shiyamjack @JR_FansClubOffl pic.twitter.com/z5egyUkvxx
பொன்னியின் செல்வனின் மகுடம்
தமிழ் சினிமாவின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் ஒருவழியாக மணிரத்னத்தின் முயற்சியால் நிறைவேறியுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசனாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் என்று அறியப்பட்ட அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். பிற நடிகர்களைப் போல ஜெயம் ரவியின் திரைவாழ்விலும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்துள்ளன. ஆனால் ஆபாசம். அதீத வன்முறை போன்ற காட்சிகள் இருந்ததில்லை. அதேபோல் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களும் அவர் செய்வதில்லை. இதுவே அவருடைய வெற்றி ரகசியம் எனலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி...!