‛நடிப்பே வேணாம்னு ஒதுங்கிட்டேன்... ஆனாலும் தேடி வந்தாங்க...’ -மறக்க முடியாத கலைஞன் ஜனகராஜ்!
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.. இந்த வசனம் இன்று வரை பிரபலமான டயலாக். இன்றைக்கும் கூட கணவன்மார்கள் மனைவி ஊருக்குப் போனால் கஸ்டமரியாக இந்த டயலாக்கை சொல்கின்றனர்.
![‛நடிப்பே வேணாம்னு ஒதுங்கிட்டேன்... ஆனாலும் தேடி வந்தாங்க...’ -மறக்க முடியாத கலைஞன் ஜனகராஜ்! Actor Janakaraj Interview on Tamil cinema journey ‛நடிப்பே வேணாம்னு ஒதுங்கிட்டேன்... ஆனாலும் தேடி வந்தாங்க...’ -மறக்க முடியாத கலைஞன் ஜனகராஜ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/02/9a079fa944b2bc8e29d37a7dced8b51d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.. இந்த வசனம் இன்று வரை பிரபலமான டயலாக். இன்றைக்கும் கூட கணவன்மார்கள் மனைவி ஊருக்குப் போனால் கஸ்டமரியாக இந்த டயலாக்கை சொல்கின்றனர்.
ஜனகராஜ் தனது நகைச்சுவையால் ஜனங்களின் மனங்களை வென்ற ராஜ் தான். குணச்சித்திர நடிகராகவும் தமிழ் சினிமாவின் அவர் கோலோச்சியவர் தான். ஜனகராஜ் நீண்ட காலமாக நடிப்புக்கு இடைவெளி விட்டிருந்தார். பின்னர் தாதா 87 படத்தில் ஜனகராஜ் நடித்தார். அது அவருக்கு ரீ என்ட்ரி. ஜனகராஜின் மகன் நவீன் அந்தப் படத்தில் நடித்திருப்பார். ஜப்பான் மொழியை மொழிபெயர்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் அந்தப் படத்தில் அவரை வலுக்கட்டாயமாகவே நடிக்க வைத்ததாக அவரே கூறியிருக்கிறார்.
நடிகர் ஜனகராஜ் அந்தப் படத்தில் கொடுத்த ரீஎன்ட்ரிக்குப் பின்னர் 96 படத்தில் வாட்ச்மேனாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் கூட நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ஜனகராஜ் ஒரு யூடியூப்புக்கு அளித்த பேட்டியில், நான் நடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். அபோது பாரதிராஜா, கங்கைஅமரன் எல்லோர் கிட்டேயும் ஏதாவது வாய்ப்பு கேட்பேன். ஏதாவது வாத்தியம் வாசிக்க கத்துக்க சொன்னதால வயலின் வாசிக்க கத்துக்குட்டேன். படிப்புல பெருசா எதுவும் சாதிக்கலை. ஆடிட்டர் ஜெனரல் ஆஃபிஸில் பியூன் வேலை கிடைத்தது. அதே ஆஃபீஸில் தான் டெல்லி கணேஷும் வேலை பார்த்தார். எப்படியாவது சினிமாவில் நடிக்கணும்கிற ஆசை மட்டும் இருந்துகிட்டே இருந்துச்சு. அந்த ஆசை ஒருநாள் நனவாச்சு. என்னை 1977ல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தினார். அதற்குப்புறம் நிறைய நடிச்சேன். என் மனைவி ஃபிஜி தீவை சேர்ந்தவங்க. அவுங்க எஸ்ஐஇடி காலேஜில் படிச்சிட்டு இருந்தாங்க. 4 ஆண்டுகள் காதலித்தோம். அப்புறம் அவரை நான் திருமணம் செய்துகிட்டேன். சினிமாவில் பரபரப்பாக இருந்தேன்.
ஒரு கட்டத்தில் ஓய்வு எடுத்தேன். அப்பையும் என்னை நிறைய பேர் அணுகினாங்க. நான் தான் ஒதுங்கியே இருந்தேன். இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லை அப்படி இப்படின்னு நிறைய வதந்தி வந்துச்சு. திடீரென தாதா 87 படத்துக்காக சாருஹாசன் சார் பேசினார். அவர் ரொம்ப மூத்தவர். அவருக்காக வந்து நடித்தேன். ரொம்ப நாள் இடைவெளிக்குப் பின்னர் அந்தப் படத்தில் நடிக்க வந்த நாளில் எனக்கு முந்தைய இரவு தூக்கமே வரலை. புதுசா நடிக்கப்போறது மாதிரி இருந்தது. இப்ப கமல்ஹாசன் கூட எந்த டச்சும் இல்லை. நண்பர் இயக்குநர் பாண்டியராஜனையும் சந்தித்து ஆறேழு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு.
இவ்வாறு ஜனகராஜ் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)