குண்டு கல்யாணம் ஹாப்பி அண்ணாச்சி...! : 22 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்புலகிற்கு விஜய் டி.வி.மூலம் ரீ என்ட்ரீ..!
விஜய் தொலைக்காட்சி மூலமாக மீண்டும் நடிப்புலகில் ரீ என்ட்ரீ அளித்திருக்கும் நடிகர் கண்டு கல்யாணம் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது தோற்றத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்கள் வெகு சிலர் மட்டுமே. அவர்களில் மூத்த நடிகர் குண்டு கல்யாணம் மிகவும் முக்கியமானவர். 1967ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வரும் குண்டு கல்யாணம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனக்கு யாரும் நிதி உதவி அளிக்காவிட்டாலும், தனக்கு யாராவது நடிக்க வாய்ப்பு அளித்தால் போதும், இளம் இயக்குனர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அவரது வேண்டுகோளை நிறைவேற்றும் விதமாக விஜய் தொலைக்காட்சி தொடரில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் அவருக்கு மனநல மருத்துவர் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்புலகிற்கு திரும்பியிருப்பதால் குண்டுகல்யாணம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள குண்டு கல்யாணம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து அழைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது ஒரு குணச்சித்திர கதாபாத்திரம்தான். அடுத்தடுத்த தொடர்களில் நிச்சயம் வாய்ப்பு இருந்தால் கூப்பிடுகிறேன் என்று கூறியுள்ளனர். நான் நடித்துள்ள கதாபாத்திரம் எப்படி உள்ளது என்று மக்கள்தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மூத்த நடிகரான குண்டு கல்யாணம் தீவிர அ.தி.மு.க. விசுவாசி. அரசியல் பிரச்சாரங்களின்போது அ.தி.மு.க.வினருக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குண்டு கல்யாணம் 1997ம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சீறுநீரக பிரச்சினையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குண்டுகல்யாணம், நான் திரைத்துறையில் இருந்து விலகியதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.
நான் நடித்தபோது சினிமாவில் நடித்து பேரும், புகழும்தான் கிடைத்தது. ஆனால், சொத்துக்களை தன்னால் சேர்க்க முடியவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது எவரும் தனக்கு உதவவில்லை என்றும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே தனக்கு உதவி செய்தார் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த பேட்டி வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு விஜய் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 'தளபதி 66'க்கும் 'ஏகே61'க்கும் உள்ள தொடர்பு இதுதான்... அடடா! இது வேற லெவல்..!
மேலும் படிக்க : எல்லாத்தையும் ஓரம் கட்டும் கயல்.. கதை இப்படினா ரீச் இப்படிதான்! இது சீரியல் டிஆர்பி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்