மேலும் அறிய

Dhanush 50: சத்தமே இல்லாமல் தனுஷ் செய்த சம்பவம்.. வெளியானது 50வது படத்தின் அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி..!

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். தற்போது அவர் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

தான் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக நடிகர் தனுஷ் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசு என்ற அடையாளத்துடன் அறிமுகமான அவர் தனக்கென தனி இடத்தை திரையுலகில் உருவாக்கி விட்டார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை வெளிப்படுத்தி தனுஷ் அசத்தியுள்ளார். மேலும் நடிகர் ராஜ்கிரண் மற்றும் நடிகை ரேவதியை முதன்மை கேரக்டர்களாக கொண்டு “பவர் பாண்டி” என்ற படத்தை இயக்கியிருந்தார். 

இந்த படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தனுஷ் கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் சத்தமே இல்லாமல் நடிகர் தனுஷ் சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார். 

அதாவது தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வந்தார் தனுஷ். இதற்காக மொட்டை போட்டுக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்து வருகின்றனர். வில்லனாக இசையமைப்பாளர் தேவாவிடம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.இப்படியான நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தனுஷ் தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில், “தனுஷ் 50 படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் எனது பார்வையில் படம் உருவாக உறுதுணையாக இருந்த கலாநிதி மாறன் சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். ஆக 2024 ஆம் ஆண்டு தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வருடமாக அமையப் போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
சென்னைக்கு அருகே இன்று உருவாகிறது தீவிர புயல் - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
Delhi Rally: 10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
10 லட்சம் பேர்..! 4,000 போலீசார், 200 சிசிடிவி கேமராக்கள் - CEC ராஜினாமா? குலுங்குமா தலைநகர் டெல்லி?
German SUV: ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
ரூ.8 லட்சத்துக்கு புதிய ஜெர்மன் எஸ்யுவி..! டர்போ இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ஆப்ஷன் - முழு விவரம்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Embed widget