மேலும் அறிய

AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் அஜித்குமார் கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றிக்கோப்பையுடன் சென்னை திரும்பிய நிலையில், விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கருதப்படுகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார்.  முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது அவரது போட்டியாளராக திகழ்ந்தவர். தற்போது கார் பந்தயத்திலும் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், டேர்டெவில் எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை திரும்பிய அஜித்:

சர்வதேச கார் பந்தயங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அஜித்குமார் பங்கேற்று வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து அஜித்குமார் நேற்று சென்னை திரும்பியுள்ளார். கார்பந்தயத்தில் வெற்றி பெற்ற கோப்பையுடன் திரும்பிய அஜித்திற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விரைவில் தொடங்கும் டேர்டெவில்:

அஜித் நடிக்கும் டேர்டெவில் படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், அஜித் சென்னை திரும்பியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கருதப்படுகிறது. அஜித்தும் அதற்கான கெட்டப்பிலே சென்னை திரும்பியுள்ளார்.

குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்தர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் ஸ்ரீலீலா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அஜித்குமாரின் மனைவி ஷாலினி அஜித் இந்த படத்தை தயாரிக்கிறார். இதற்காக இவர்கள் ப்ரேவ்ஹார்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

பணிகள் தீவிரம்:

படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள், பணியாற்ற உள்ள மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் தேர்வுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அஜித் கார்பந்தயத்திற்கு சென்ற பிறகு நடிப்பாரா? மாட்டாரா? என்று கேள்வி எழுந்த நிலையில் டேர்டெவில் பட அறிவிப்பு வெளியானது. அவரது நடிப்பில் கடைசியாக 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. அதன்பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவரது படம் வெளியாகாமலே உள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

இதனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அவரது படத்தின் பணிகள் தொடங்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த படமும் தொடங்கப்பட்டால் வரும் ஏப்ரல் மாதம்  திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜித் கார்பந்தயத்தில் பங்கேற்று வருவதால் அதற்கேற்ப படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபு, உன்னி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். ஆதிக் ரவிச்சந்தர் படங்களில் தவறாமல் நடிக்கும் சுனிலும் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படம் சூதாட்டத்தை மையமாக கொண்ட திரைப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
நுழைவுச்சீட்டு இருந்தும் உள்ளே அனுமதி இல்லை! ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்... என்ன நடந்தது?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Scene Box Office Collection: 100 கோடி கன்ஃபர்ம்.. முதல் நாளிலே சீன் காட்டிய சூர்யாவின் சீன்! வசூல் இவ்வளவா?
Sai Pallavi:
Sai Pallavi: "என்னோட Support உங்களுக்கு இருக்கும்.." நடிகர் தனுஷின் அரசியல் வருகைக்கு சாய் பல்லவி ஆதரவு
Dhanush:
Dhanush: "தனுஷ் வந்தாலே ஆன்மீக உணர்வு வரும்..." ஓம் ஹீரோயின் ஸ்ரீலீலா நெகிழ்ச்சி
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
ரூ.2000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
Diwali 2026: சும்மா நச.. நசனு..! குறுக்கே வந்த கெளசிக்காக விடாமல் பெய்யும் மழை..! புஷ்வானம் ஆகும் தீபாவளி கொண்டாட்டம்!
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
இன்று கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
Embed widget