Ajith Trisha : விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்...8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் அஜித்-த்ரிஷா காம்போ...உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதயாநாயாகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ajith Trisha : நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதயாநாயாகியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடாமுயற்சி
தமிழ் திரையுலகின் டாப் ஹீரோக்களில் அஜித் தனக்கான தனி இடத்தில் உள்ளார். இவரது படம் குறித்த அப்டேட்டுக்காக ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே காத்திருக்கும் அளவிற்கு இவரது படத்தின் ரிலீஸ் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். இந்நிலையில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமாரின் 62வது திரைப்படமான ’விடாமுயற்சி' உருவாகவுள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தின் இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஆனால் படத்தின் கதை தயாரிப்பு தரப்பை திருப்தி செய்யாத காரணத்தால் விக்னேஷ் சிவன் இப்படத்தில் இருந்து விலக்கப்பட்டார்.
இதனை அடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் இந்த படத்திற்கான சூட்டிங் எப்போது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தற்போது ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தயாரிப்பு பணிக்காக லண்டனுக்கு சென்றிருக்கும் அஜித் மற்றும் மகிழ்திருமேனி இருவரும் சென்னை திரும்புகின்றனர். அதனால் இந்த மாத இறுதியில் விடாமுயற்சியின் படப்பிடிப்பு புனேவில் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் த்ரிஷா காம்போ
இந்நிலையில், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு 5வது முறையாக அஜித்-த்ரிஷா இணைய உள்ளது ரசிர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் கில்லாடி, ஜி, கிரிடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இவர்களது காம்போ இருந்துள்ளது.
ஆனால் என்னை அறிந்தால் மற்றும் மங்காத்தாவில் மட்டும் இவர்களது காம்போவிற்கு ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அஜித்-த்ரிஷா இணைவது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு வில்லன் கேரக்டர் கொடுக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Lust Stories 2: தமன்னா, கஜோல், ம்ருனால் தாகூர்... வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தின் டீஸர்