மேலும் அறிய

Abhishek Shankar: முதல் பார்வையிலேயே காதல்.. 8 ஆண்டுகால காத்திருப்பு.. அபிஷேக்கின் காதல் கதை தெரியுமா?

நான் இன்றைக்கும் தினக்கூலிக்காரன் தான் என பிரபல நடிகர் அபிஷேக் மோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நான் இன்றைக்கும் தினக்கூலிக்காரன் தான் என பிரபல நடிகர் அபிஷேக் மோகன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

ஞானராஜசேகரன் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அபிஷேக் சங்கர். இவர் அதன்பிறகு ஏராளமான படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள அபிஷேக் சங்கர், 2010ம் ஆண்டு கதை என்ற படத்தை இயக்கினார். இதனிடையே சின்னத்திரைக்கு வந்த அபிஷேக், 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலில் பாஸ்கர் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். 

இப்படி சின்னத்திரை, பெரியதிரை என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் சங்கர், நேர்காணல் ஒன்றில் தன் காதல் கதையை பற்றி பேசியுள்ளார். அதில், “எனக்கு இன்னைக்கு சினிமா பின்புலம் கிடையாது. நான் ஒரு தினக்கூலி வேலைக்காரன். நான் ஹீரோவா ஒரு படம் பண்ணிட்டேன். அது ரிலீசாகுமான்னு தெரியல. நான் மேற்கு மாம்பலத்தில் ஒருவருக்கு டிரான்ஸ்லேட் பண்ற வேலை பார்த்தேன். ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மொழிமாற்றம் செய்து கொடுத்தால் ஒரு பக்கத்துக்கு ரூ.5 என பணம் கிடைக்கும். ஒரு 10 பக்கம் பண்ணி கொடுத்து விட்டு கிடைக்கும் ரூ.50ல் நேராக தேவி தியேட்டர் செல்வேன். அங்க படம் பார்த்துவிட்டு  அங்கே இருந்து நடந்தே சின்மயா நகர் வருவேன். படம் பார்க்க ரூ.2.90 காசு போக மீதி பணம் இருக்கும். 

அப்போது நான் மனைவியை காதலித்து கொண்டிருந்தேன். அவரோ மும்பையில் இருந்தார். அதனால் வாரம் ஒருமுறை போன் செய்ய, அந்த பணத்தை சேமித்து வைப்பேன். இப்படித்தான் போய் கொண்டிருந்தேன். ஆனால் மும்பையில் நான் பெரிய ஹீரோ என்ற இமேஜ் தான் இருந்தது. 

நான் இசைப்பள்ளியில் தான் மனைவியை சந்தித்தேன். அவர் வயலின் இசையில் கைதேர்ந்தவர். ஒரு இசை திருவிழாவில் தான் சந்தித்தேன். முதல் பார்வையிலேயே காதலில் விழுந்தேன். அதன்பிறகே அவர் பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நானோ ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். இப்பவும் அப்படித்தான் இருக்கிறேன். 

என்னை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவர். அதனால் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளக்கூடாது என முடிவு செய்து விட்டோம். எப்போது வீட்டில் ஒத்துக் கொள்கிறார்களோ,அப்ப பார்த்துக்கலாம் என சொல்லி கிட்டதட்ட 8 ஆண்டுகள் காத்திருந்தோம். அவங்க வேற வழி இல்லாம என்னிடம் மாட்டிக் கொண்டார் (சிரித்தபடியே சொன்னார்)” என அபிஷேக் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget