மேலும் அறிய

Tata 7 Seater: ஹிட்டடித்த எஸ்யுவியை 7 சீட்டராக அப்க்ரேட் செய்யும் டாடா..! விலை, அம்சங்கள், வசதிகள், ரேட்டிங்

Tata Sierra 7 Seater: டாடா மோட்டார்ஸிற்கு அண்மையில் பெரும் வெற்றியை கொடுத்த சியாரா கார் மாடலை, 7 சீட்டர் எஸ்யுவி ஆக மேம்படுத்த நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம்.

Tata Sierra 7 Seater: டாடா சியாராவின் 7 சீட்டர் எடிஷன் அடுத்த ஆண்டு இறுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.

டாடா சியாரா 7 சீட்டர்..!

டாடா நிறுவனத்தின் லெஜண்டரி கார் மாடல்களில் ஒன்றான சியாரா, நவீன தொழில்நுட்பம் மற்றும் ரெட்ரோ தோற்றம் ஆகியவற்றின் கலவையாக அப்க்ரேட் செய்யப்பட்டு அண்மையில் ரீலாஞ்ச் செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் சியாரா அடிப்படையில் ஒரு 7 சீட்டரை உருவாக்க இந்த உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த கார் எப்படி இருக்கக் கூடும்? என்ன மாதிரியான அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்பது போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

டாடா சியாரா 7 சீட்டர் - டிசைன் விவரங்கள்

டாடா சியாராவின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம், அதன் கம்பீரமான தோற்றம் மற்றும் உண்மையான எடிஷனிலிருந்து அப்படியே பின்பற்றப்பட்ட தனித்துவமான வடிவமைப்பு அம்சங்களாகும்.  ப்ராண்ட் ட்சார்பில் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படும் ஆர்கோஸ் ப்ளாட்ஃபார்மில் புதிய சியாரா எடிஷன் உருவாகலாம்.  அதன்படி, இதன் வழக்கமான எடிஷனை காட்டிலும் 7 சீட்டரானது பின்புறம் கூடுதல் நீளத்தை பெறும்.  செங்குத்தான ஹெட்லேம்ப்களுடன் எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளை இணைக்கும் தனித்துவமான வடிவமைப்பு அப்படியே தொடரலாம். கூடுதலாக, புதிய 7 சீட்டருக்காக டாடா புதிய அலாய் வீல் வடிவமைப்புகள், பிரத்யேக வண்ண ஆப்ஷன்கள் மற்றும் தனித்துவமான பேட்ஜிங்குகள் வழங்கப்படலாம். 

டாடா சியாரா 7 சீட்டர் - அம்சங்கள், வசதிகள்

உட்புறத்தை கருத்தில் கொண்டால், தற்போது விற்பனையில் உள்ள 5 சீட்டரிலிருந்து புதிய 7 சீட்டர் மிகப்பெரிய தாக்கத்தை பெறக்கூடும். அதன்படி இன்ஃபோடெயின்மென்ட்டிற்காக 12.3-இன்ச் இரட்டை ஸ்க்ரீன் மற்றும் ஓட்டுநருக்கான 10.25-இன்ச் டிஸ்பிளே என மூன்று ஸ்க்ரீன் செட்-அப் அப்படியே தொடரலாம். இதுபோக பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்ட வசதி மற்றும் பவர் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள், டூயல்-ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ப்ரீமியம் JBL ஆடியோ சிஸ்டம் மற்றும் 360-டிகிரி கேமரா ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வேரியண்ட்டைப் பொறுத்து, சஃபாரியைப் போலவே நடு வரிசைக்கு கேப்டன் இருக்கைகளும் வழங்கப்படலாம். இது வாடிக்கையாளர்களுக்கு 6-சீட் மற்றும் 7-சீட் உள்ளமைப்புகளை வழங்கும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் டாடா சியரா ஏற்கனவே 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.  அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் 7-சீட்டரும், லெவல்-2 ADAS, பல ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் சிறப்பான செயல்பாட்டை வழங்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Budget 7 Seater: ரு.20 லட்சம் பட்ஜெட்..! இந்தியாவில் கிடைக்கும் டயங்கரமான 7 சீட்டர்கள் - மைலேஜ், அம்சங்கள், ரேட்டிங்

டாடா சியாரா 7 சீட்டர் - இன்ஜின் விவரங்கள்

புதிய 7-சீட்டர் மாடலில் சியராவுடன் அறிமுகமான புதிய 1.5-லிட்டர் TGDi பெட்ரோல் இன்ஜின் (158 bhp & 255 Nm) இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோக 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் (104 bhp & 145 Nm) இடம்பெறலாம். 7 சீட்டர் பெரிய வாகனம் என்பதால், ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் உள்ள 2.0-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் (170 bhp & 350 Nm) SUV-யில் இடம்பெறலாம். 


Tata 7 Seater: ஹிட்டடித்த எஸ்யுவியை 7 சீட்டராக அப்க்ரேட் செய்யும் டாடா..! விலை, அம்சங்கள், வசதிகள், ரேட்டிங்

டாடா சியாரா 7 சீட்டர் - போட்டியாளர்கள், விலை

சியாரா 7 சீட்டர் உள்நாட்டில் விற்பனைக்கு வந்தால், மஹிந்திரா XUV 7XO, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற கார்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளும். இதுபோக ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாகக் கொண்ட 7-சீட்டரான பிக்ஸ்டர் போன்ற கார் மாடலும் அடுத்தடுத்து விற்பனைக்கு வரவுள்ளது நினைவுகூறத்தக்கது. வெளியீடு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும்,  2027-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. போட்டி நிறைந்த பிரிவு மற்றும் இந்த 7-சீட்டரில் வழங்கப்படும் அம்சங்களையும் கருத்தில் கொண்டால், சியரா அடிப்படையிலான 7-சீட்டரின் விலை ரூ. 18 லட்சத்தில் தொடங்கி ரூ. 25 லட்சம் வரை நீளக்கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget