மண்மனம் மாறாத பாரதிராஜா படங்களின் ஹிட்ஸ்..!
மண்மனம் மாறாத படங்களின் இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் அமைந்த சிறப்பான பாடல்களின் லிஸ்ட்
'என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா.. என்று கேட்கும்போது எல்லாம் மண்மனம் மாறாத கிராமிய சூழல் கதை தயாராக இருக்கும். இயக்குநர் பாரதிராஜா இன்று தனது 79ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1977-ஆம் ஆண்டு வெளியான படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக பாரதிராஜா அறிமுகமானார். பல வெற்றி படங்களை கொடுத்து வந்துள்ளார். இவருடைய படங்களில் அமைந்த சிறப்பான ப்ளேலிஸ்ட் இதோ
1. ராசாவே உன்னை நம்பி:
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, முதல் மரியாதை திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்று இருக்கும். இப்பாடலை ஜானகி பாடியிருப்பார். இசைஞானியின் இசை மற்றும் ஜானகியின் குரல் நம்மை மிகவும் மயங்கவைக்கும் படி அமைந்திருக்கும்.
"அடடா எனக்காக
அருமை கொறஞ்சீக
தரும மகராசா
தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலான்னு தான் பேரு
அட மந்தையிலே நின்னாலும் நீ
வீரபாண்டி தேரு..."
2. பொன் மானே கோபம் ஏனோ:
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இதற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். உன்னி மேனன் மற்றும் உமா ரமணன் இப்பாடலை பாடியிருப்பார்கள்.
"ஆண்கள் எல்லாம்
பொய்யின் வம்சம்
கோபம் கூட
அன்பின் அம்சம்
நாணம் வந்தால்
ஊடல் போகும் ஓஹோ
பொன் மானே
கோபம் ஏனோ பொன்
மானே கோபம் ஏனோ..."
3. பூவில் வண்டு:
காதல் ஓவியம் திரைப்படத்தில் அமைந்த பாடல் இது. இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். இளையராஜா-எஸ்பிபி-பாரதிராஜா கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
"வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் யோகம் மேடும்..."
4. கண்ணுக்குள் நூறு நிலவா:
வேதம் புதிது திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை எஸ்பிபி மற்றும் சித்ரா பாடியிருப்பார்கள். இளையராஜா-பாரதிராஜா கூட்டணியில் அமைந்த சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று.
"தென்றல் தொட்டதும்
மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள்விட்டுவிடுமா
வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்க்கைக்கு
எல்லை நாம் போட்டது சாத்திரம் தாண்டி
தப்பி செல்வதேது..."
5. செந்தூர பூவே:
பாரதிராஜாவின் முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. ஜானகியின் குரலில் இளையராஜா இசையில் ரசிகர்களை கட்டிப் போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
"தென்றலை தூது விட்டு ஒரு
சேதிக்கு காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு
இந்த கனவினில் நான் மிதப்பேன்
கன்னி பருவத்தின் வண்ண கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ண பூவே தென்றல் காற்றே
என்னை தேடி சுகம் வருமோ..."
இவை தவிர பல ஹிட் பாடல்கள் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்துள்ளன. அவற்றை அடுக்க ஒரு நாள் போதாது.
மேலும் படிக்க: ‛கோடி அருவி கொட்டுதே...’ மழையை ரசிக்க வைக்கும் பாடல்களின் ப்ளே லிஸ்ட் இதோ !