மேலும் அறிய

Love Today remake: ’லவ் டுடே’ இந்தி ரீமேக்கில் இணையும் பாலிவுட் உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகள்..!

சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 150 கோடிகள் வரை வசூலை வாரிக்குவித்து சென்ற ஆண்டு மாபெரும் ஹிட் படமாக அமைந்ததுடன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களின் மகன் -  மகள் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லவ் டுடே:

ஹை பட்ஜெட் படங்களின் மத்தியில் வெளியாகி  கோலிவுட்டில் சென்ற ஆண்டு சர்ப்ரைஸ் பேக்கேஜாக அமைந்து ஹிட் அடித்த படம் இயக்குநர் பிரதீப் ரங்காநாதனின்  ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த இந்தப் படத்தில் நடிகை இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

சுமார் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 150 கோடிகள் வரை வசூலை வாரிக்குவித்து சென்ற ஆண்டு மாபெரும் ஹிட் படமாக அமைந்ததுடன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சந்தர்ப்பவசத்தால் காதலர்கள் தங்கள் செல்ஃபோன்களை மாற்றிக் கொள்வதும் அதற்கு பின்னான விளைவுகளையும் காமெடி கலந்த காதல் படமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பாடல்களும் யுவன் இசையில் ஹிட் அடித்தன.

அமீர்கான் - ஸ்ரீதேவி வாரிசுகள்:

மேலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லவ் டுடே படம் பிற மொழி ஆடியன்சையும், பாலிவுட் நடிகர்களையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியது. லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்கனவே எகிறியிருந்த நிலையில் தற்போது இதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கானும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூரும் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் இணைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசுகள் மகிழ்ச்சி:

அமீர் கானின் மகன் ஜூனைத் கான் ஏற்கெனவே மகாராஜா எனும் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. லவ் டுடே ரீமேக் அவருக்கு இரண்டாவது படமாக அமையும்.

அதேபோல் இயக்குநர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படத்தில் குஷி நடித்து வரும் நிலையில், அவருக்கும் இது இரண்டாவது படமாக அமையும்.

மேலும், நடிகை ஜான்வி கபூர் சூப்பர்ஹிட் மராட்டி மொழி காதல் படமான சாய்ராட் படத்தின் ரீமேக் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த நிலையில், அக்கா வழியில் அவரது தங்கை குஷியும் சூப்பர்ஹிட் ரீமேக் படமான லவ் டுடே ரீமேக்கில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லவ் டுடே பட ரீமேக்கிற்காக இருதரப்பினரும் முன்னதாக அணுகப்பட்டதாகவும், ஜூனைத் - குஷி இருவரும் தங்கள் கதாபாத்திரங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: Raghav Chadha - Parineeti Chopra dating : சம்திங் ராங்... பரினிதி சோப்ராவுடன் டேட்டிங் செய்யும் எம்.பி... ட்ரெண்டிங்காகும் ரைமிங் பதில்

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget