Aalavandhan Re-release: 1000 தியேட்டர்களில் ஆளவந்தான்..! விரைவில் ரீ - ரிலீஸ்; தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு..!
Aalavandhan Re-release: Aalavandhan: ஆளவந்தான் திரைப்படம் விரைவில் 1,000 திரையரங்கில் ரீ - ரிலீஸ் செய்யப்படவுள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.
ஆளவந்தான் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அப்ஹெ என்று ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், ரவீனா டன்டான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆளவந்தான். ரிலீஸ் ஆகி 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளவந்தான் திரைப்படம் விரைவில் 1,000 திரையரங்கில் ரீ - ரிலீஸ் செய்யப்படவுள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விரைவில் திரையரங்கில் உங்கள் உள்ளங்களை ஆள வருகிறான் ஆளாவந்தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆளவந்தான் படத்தின் போஸ்டரையும் சேர்த்து அவர் வெளியிட்டுள்ளார். அதில், புது டிஜிட்டல் ஒலி அமைப்பிற்கு ஏற்றவாறு எடிட் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியான திரைப்படம் 2001ல் படும் தோல்வியைச் சந்தித்தது. ஆனால் கமல்ஹாசனின் முயற்சிக்கு இந்த பெரிதும் பாராட்டப்பட்டது.
டிஜிட்டலுக்கு உயர்த்தப்பட்டுள்ள இந்த படத்தில் , Motion Control Camara டெக்னீசியனாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காட் இங்லிஸ் பணியாற்றியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிராண்ட் பேஜ் பணியாற்றியுள்ளார். VFX காட்சிகளை ஜான் மற்றும் மாஜ்தான் ஆகியோர் அமைத்துள்ளனர். நடன காட்சிகளை ஆப்பிரிக்க நடனக் குழுவான ’ஆப்ரிக்கன் டேன்ஸ் அகாடமி’ அமைத்துள்ளது.
இந்த திரைப்படம் வெளியான காலகட்டமான 2001ல் ரசிகர்களிடம் திரைக்குழு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் இத்திரைப்படத்தின் தோல்விக்கு கமல்ஹாசன் தான் காரணம் என பகிரங்கமாக தெரிவித்தார். இதற்கு அன்றைய நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ”கமல் சிறந்த கலைஞர், அவரை நீங்கள் இப்படிச் சொல்லலாமா” என கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022ல் ரஜினி நடித்த பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படம் முதலில் வெளியானபோது தோல்வி அடைந்தது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது படம் வசூல் வேட்டை நடத்தியது. பாபா படமும் ஆளவந்தான் படமும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.