Nikki Galrani Engagement: எங்களை நாங்களே கண்டுபிடித்தோம்.. காதல்கதையை பகிர்ந்த நிக்கி கல்ராணி! நிச்சயதார்த்த போட்டோஸ்!!
நடிகை நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை கரம்பிடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

நடிகை நிக்கி கல்ராணி நடிகர் ஆதியை கரம்பிடிக்க இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் நீண்ட நாட்களாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று இருவருக்கும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
View this post on Instagram
தங்களது ரிலேஷன்ஷிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைத்த இருவரும், தங்களது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதித்து கொடுக்க இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட நிக்கி கல்ராணி, “வாழ்க்கையில் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்வதுதான் சிறந்தது. சில வருடங்களுக்கு முன்பு எங்களை நாங்களே கண்டுபிடித்தோம்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
நிக்கி கல்ராணியும், ஆதியும் முன்னதாக, மல்பு, யாகவராயினும் நா காக்க, மரகரத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர். இதன் மூலம் ஆதியுடன் நெருங்கி பழகிய நிக்கி கல்ராணி, அண்மையில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்ற ஆதி அப்பாவின் பிறந்தநாள் பார்டியிலும் பங்கேற்றதாக தகவல் வெளியானது.
View this post on Instagram
ஆதி நடிப்பில் ஓடிடியில் வெளியான கிளாப் திரைப்படம் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. ஆதி அடுத்ததாக லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தேனியின் தி வாரியர் படத்தில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

