மேலும் அறிய

ஷாருக் கானுக்கு அட்லீ , சல்மான் கானுக்கு முருகதாஸ்...சிகந்தர் பட டீசர் இதோ

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் , ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சிகந்தர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

ஏ.ஆர் முருகதாஸ் 

தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ. ஆர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா , கஜினி , 7 ஆம் அறிவு , துப்பாக்கி , கத்தி , சர்கார் , ஸ்பைடர் , உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இதில் ஸ்பைடர் படத்தைத் தவிர்த்து முருகதாஸ் இயக்கிய அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே 23 படத்தை இயக்கி வருகிறார். ஸ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தில் கன்னட நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சுதீப் எளமன் ஓளிப்பதிவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு கையாள்கிறார்கள். இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. 

சிகந்தர் பட டீசர் 

ஒரு பக்கம் எஸ்.கே 23 படத்தை இயக்கி வரும் முருகதாஸ் இன்னொரு பக்கம் இந்தியில் சல்மான் கான் நடிக்கும் சிகந்தர் படத்தையும் இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நாயகியாகவும்  சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாரயாணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சிகந்தர் படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருந்தது. முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமானதைத் தொடர்ந்து சிகர்ந்தர் படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இன்று சிகந்தர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பாலிவுட்டின் ஒரு பெரும் நடிகர்கள ஷாருக் கான் மற்றும் சல்மான் கான். இரு நடிகர்களின் படங்களை வைத்து எப்போதும் ரசிகர்களிடையில் போட்டி நிலவு வருவது சகஜம் தான். அந்த வகையில் தமிழ் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு ஷாருக் கான் நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அட்லீ ஷாருக் கானுக்கு கொடுத்தது போல தற்போது ஏ.ஆர் முருகதாஸ் சல்மான் கானை வைத்து ஒரு பிரம்மாண்ட ஹிட் கொடுப்பார் என   சல்மான் கான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget