மேலும் அறிய

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

1989 Diwali Release Movies: ஒரே நடிகரின் இரு படங்கள் என நிறைய படங்கள் வெளியாகி, பெரும்பாலானவை வெற்றியை சுவைத்தன.

1989 ம் ஆண்டு தீபாவளி பண்டியையை 80 ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள். 1989 அக்டோர் 29 ஞாயிற்று கிழமை தீபாவளி. அக்டோர் 28 ல் சீட்டு கட்டு போல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. படங்கள் என்றால் சும்மா உப்பு சப்பு என்றில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், புரட்சி தமிழர் சத்யராஜ், மக்கள் கலைஞன் ராமராஜன், இயக்குனர் இமயம் பாலசந்தர் ஆகியோரின் படங்கள் களம் கண்டன. என்ன ஆனது அந்த களம்... எந்த படம் வெற்றி பெற்றது? இதோ அது பற்றிய அலசல்...

வெற்றி விழா: 

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

வெற்றி விழா... வெள்ளி விழா என்பார்கள். கமல், அமலா, பிரபு, குஷ்பூ ஆகியோர் நடித்த இத்திரைப்படத்தை மறைந்த இயக்குனர் பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு ராஜேஸ்வர் மற்றும் ஷண்முகப்பிரியன் ஆகியோர் கதை எழுதியிருந்தனர். இசைஞானி இளையராஜாவின் இசையில், பரபரப்பான த்ரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக படமாக்கியிருப்பார் பிரதாப் போத்தன். ஒரு போலீஸ் அதிகாரிக்கு நேரும் சம்பவங்களும், அதன் பின் நடக்கும் விளைவுகளும் தான் கதை. வேண்டா விருப்பாக கமல் நடித்த திரைப்படம். கமலுக்கு விருப்பமே இல்லாமல் நடித்து, பின்னர் வெற்றி பெற்ற பின், அதை கண்டு பிரமித்ததாக இயக்குனர் பிரதாப் போத்தன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 175 நாட்கள் பிரமாண்டமாக தியேட்டரில் ரசிகர்களை ஆரவாரப்படுத்திய திரைப்படம் , வெற்றி விழா. 

மாப்பிள்ளை:

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

‛அட்டாகு யமுடு அம்மாய்கி மொகுடு’ என்கிற தெலுங்கு படத்தை ரீமேக் செய்து, அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமலா, ஸ்ரீவித்யா, நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்த திரைப்படம். கீதா ஆர்ட்ஸ் கதை இலாக்கவின் கதைக்கு, பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுத, ராஜசேகர் இயக்கினார். தெலுங்கில் படத்தை தயாரித்த அதே கீதா ஆர்ட்ஸ் சார்பில் அல்லு அர்ஜூன் தான் இந்த படத்தையும் தயாரித்தார். இசை இளையராஜா. பணக்கார வீட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் மருமகன். மருமகனை எப்படியாவது விரட்டிவிட்டு பணக்காரரை தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் மாமியார். இவர்களுக்குள் நடக்கும் போட்டி தான் கதை. ரஜினி-ஸ்ரீவித்யா இருவருக்கும் நடக்கும் போட்டா போட்டி படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. 150 நாட்கள் வரை ரசிகர்களை மகிழ்வித்த இத்திரைப்படம், பிந்நாளில் தனுஷ் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

வாத்தியார் வீட்டு பிள்ளை:

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

முக்கிய நடிகர்கள் என்ற பட்டியல் வரும் போது, 80களில் சத்யராஜ் படங்களுக்கும் கிராக்கி இருக்கும். அந்த வரிசையில் 1989ல் தன் ரசிகர்களுக்காக சத்யராஜ் களமிறக்கிய திரைப்படம் தான் வாத்தியார் வீட்டு பிள்ளை. பி.வாசு இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம். வாத்தியரின் தம்பியாக சத்யராஜ். தன் அண்ணன் மகளை தங்கையாக பாவித்து பழகி வருகிறார். அங்குள்ள பெரிய வீட்டுக்காரர்கள், சத்யராஜை பழிவாங்குதற்காக அவரது தங்கையை தங்கள் வீட்டு பையனுக்கு திருமணம் செய்து கொடுமை படுத்துகிறார்கள். இதனால் சத்யராஜ் குடும்பத்தில் நடக்கும் சண்டைகள், எப்படி அதை சத்யராஜ் எதிர்கொள்கிறார் என்கிற பாசப் போராட்டத்தை கலகலப்பாக, கண்ணீராக, கறாராக பல விதங்களில் கூறும் படம். சத்யராஜ், ஷோபனா, ராஜேஷ், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், இசைஞானி இளையராஜாவின் இசையின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட். இன்றும் டிவிகளில் அதிகம் ரசித்து பார்க்கும் திரைப்படம். 

தங்கமான ராசா:

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

ஊரே ரஜினி, கமல், விஜயகாந்த் என்று கொண்டாடிக்கொண்டிருந்த போது, ஒருவர் மட்டும் அவருக்கான இடத்தை தக்க வைத்து, அதில் பயணித்துக்கொண்டிருந்தார். அவர் தான், ராமராஜன். கிராம மக்களின் ஆஸ்தான கதாநாயகனாக அவர் தான் பயணித்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவர், எந்த மாஸ் ஹீரோக்களின் படங்கள் வந்தாலும், போட்டிக்கு தனது படத்தையும் களமிறக்கிவிடுவார். அந்த வகையில் அக்டோபர் 28 அன்று தீபாவளி ரிலீஸாக தங்கமான ராசா களமிறங்கியது. ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், வினுசக்கரவர்த்தி , காந்திமதி உள்ளிட்டோர் நடித்திருந்த அத்திரைப்படம், இளையராஜாவின் இசை மழையில் மிதந்து கொண்டிருந்தது. வழக்கமான ராமராசன் படம் போல, இந்த படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

ராஜநடை:

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரும், புரட்சி கலைஞர் விஜயகாந்தும் இணைந்த திரைப்படம். அவர்களின் வெற்றி கூட்டணியில் ராஜநடை முக்கியமான படமாகும். சிஐடி அதிகாரியாக வரும் விஜயகாந்த். அவரை மனதார விரும்பு மனைவி சீதா. தனக்கு இருக்கும் நோய் காரணமாக அவர் எடுக்கும் முடிவுகள். இதற்கிடையில் தன் கணவரோடு இணையும் சீதாவின் தோழியும் சிஐடி அதிகாரியுமான கவுதமியின் வருகை என குடும்பம், க்ரைம் என இரண்டிலும் பயணிக்கும் கதை. வழக்கமான போலீஸ் வேடம் என்றாலும் அதிலும் வித்யாசம் காட்டியிருப்பார் விஜயகாந்த். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னாளில் இந்தியில் இடம் பெயரும் அளவிற்கு திடமான கதை. தீபாவளி ரிலீஸில் ரஜினி, கமலுடன் போட்டி போடுவதற்கு தயாராக வந்த திரைப்படம் என்றும் இதை கூறலாம். 

புதுப்புது அர்த்தங்கள்:

1989 Diwali Release Movies: தீபாவளினா... இது தான் தீபாவளி... ரிலீஸ் ஆன எல்லா படமும் ஹிட்... மறக்க முடியாத 1989!

படமும், இசையும் ஒன்றாக இணையும் போது அந்த படம் கட்டாயம் ஹிட் அடிக்கும் என்பதற்கு சரியான உதாரணம், புதுப்புது அர்த்தங்கள். இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் வேறு ஒருவர்; நடிகையும் வேறு ஒருவர். ஆனால், கடைசியில் அதில் நடித்தது ரஹ்மான், சித்தாரா, கீதா. இந்த மூன்று பேருக்கு இடையே நடக்கும் கதை தான், புதுப்புது அர்த்தங்கள். புகழ் பெற்ற பாடகர் ஒருவர்; அவரை காட்டு மிராண்டித்தனமாக காதலிக்கும் மனைவி. அவளது டார்ச்சர் தாங்க முடியாமல் நாடோடியாக வெளியேறும் பாடகர். அங்கு தன்னைப் போலவே வரும் இன்னொரு பெண்ணை காதலிக்க, அவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது? கணவனை இழந்த காதல் மனைவி என்ன ஆனாள்? எதார்த்தமாக, எளிமையாக, அழகாக, கவிதையாக கூறியிருப்பார் பாலசந்தர். கவிஞர் வாலியும், இளையராஜாவும் தான் மொத்த படத்தையும் தாங்கியிருப்பார்கள். அன்றும், இன்றும், என்றும் பேசப்படும் திரைப்படமாக அமைந்தது. 

திராவிடன், அன்புக்கட்டளை:

அந்த தீபாவளி இரு நடிகர்கள், தங்கள் இரு படங்களை இறக்கினார்கள். வாத்தியார் வீட்டு பிள்ளையில் நடித்த சத்யராஜ், திராவிடன் என்ற படத்தையும் அதே தீபாவளியில் ரிலீஸ் செய்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே நேரத்தில் வாத்தியார் வீட்டு பிள்ளை அவருக்கு கை கொடுத்தது. அதே போல தான், தங்கமான ராசா படத்தை வெளியிட்ட ராமராஜன், அன்புக்கட்டளை என்கிற படத்தையும் அதே நாளில் ரிலீஸ் செய்தார். எம்.ஜி.ஆரிசம் கலந்த படமாக வெளியாகி,பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், ராமராஜனுக்கு ஓரளவிற்கு பெயர் கொடுத்த படம். ஆனால் தங்கமான ராசா அளவிற்கு வெற்றியை பெறவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.