![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ப்ரியங்காவின் 10 ஆண்டு பயணம்... நிகழ்ச்சியின் போது விஜய் டிவி செய்த சம்பவம்!
10 Years of Priyanka: ‛10 ஆண்டுகள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல’
![ப்ரியங்காவின் 10 ஆண்டு பயணம்... நிகழ்ச்சியின் போது விஜய் டிவி செய்த சம்பவம்! 10 Years of Priyanka Celebrated by Vijay Television ப்ரியங்காவின் 10 ஆண்டு பயணம்... நிகழ்ச்சியின் போது விஜய் டிவி செய்த சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/f2d143abe11b35355d6b2b9b97abf1a21661155683769107_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கை தேர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் ப்ரியங்கா, தனியார் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
View this post on Instagram
சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்ற ப்ரியங்கா, இறுதி போட்டி வரை முன்னேறி தனது திறமையை நிரூபித்தார். கோமாளி தனம், சீரியஸ் தனம் என எல்லா ஜானரிலும் தனித்துவம் பெற்ற ப்ரியங்கா தேஷ்பாண்டே, டிவி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியை ராஜூ உடன் இணைந்து நடத்தி வருகிறார். அவரது 10 ஆண்டு நிறைவையொட்டி, திடீரென அவருக்கு ஷாக் அளித்துள்ளது விஜய் டிவி. நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே, ப்ரியங்காவிற்கு மிகவும் பிடித்த, அவருடன் நெருங்கி பழகி வரும் மாகபா ஆனந்த், பிக்பாஸ் நிரூப் நந்தகுமார், பாடகர் பூவையார் உள்ளிட்டோர் அரங்கிற்குள் வந்து, ப்ரியங்காவை கட்டிப்பிடித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
View this post on Instagram
அப்போது, மாகபா ஆனந்தை புகழ்ந்து பேசிய ப்ரியங்கா, தனக்கு அவர் தான் பக்கபலமாக இருந்ததாக கூறினார். அதன் பின் மைக் பிடித்து பேசிய நிரூப், ‛10 ஆண்டுகள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல’ என்று ப்ரியங்காவை புகழ்ந்தார். மற்ற அனைவரும் புகழ்ந்து போச, கண்ணீர் மல்க ப்ரியங்கா மேடையில் நின்று கொண்டிருந்தார். இந்த காட்சிகளை இப்போது, விஜய் டிவி தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)