மேலும் அறிய

Urban Local Body Election: பல்வேறு துறையைச் சேர்ந்த இளம்பெண்கள் கலக்கும் மதுரை தேர்தல் களம்..

மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  முதுகலை பட்டதாரிகள், மருத்துவத்துறை, அழகு கலைதுறையில் பணிபுரியும் இளம் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் சினிமா எடுத்தாளும் அதன் வெற்றி மதுரையில் தான் எதிரொலிக்கும். சினிமாவோ, அரசியலோ அது மதுரையில் இருந்துதான் புறப்பாடாகிறது. மதுரையில்தான் கொண்டாட்டங்கள் அதிகம். தேர்தல் களங்களிலும் அப்படி தான் இருந்துவருகிறது. தேர்தலில் நிற்கும் பெண் வேட்பாளர்களின் தோற்றம் ஒரே வழித்தடத்தில் வந்துகொண்டிருந்தது. அரசியலில் இருக்கும் பெண்கள் என்றால் பெரிய பொட்டு வச்சுக்கனும். கழுத்து நிறைய தங்க நகை போட்டுக்கனும், கையில் முரட்டு வளையல்களும், பெரிய சைஸ் மோதிரங்கள் என்று பிரமாண்ட தோற்றத்தில் இருக்கும் மூத்த பெண் நிர்வாகிகள் தான் அதிகளவு தொடர்ந்து தேர்தலில் களம் கண்டு வந்தனர்.

Urban Local Body Election: பல்வேறு துறையைச் சேர்ந்த இளம்பெண்கள் கலக்கும் மதுரை தேர்தல் களம்..
இந்நிலையில் சமீப காலமாக இளம் பெண் வேட்பாளர்களும், பட்டதாரி பெண்களும் அதிகளவு தேர்தலில் நின்று வருகின்றனர். இந்த வரிசையில் மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்   மருத்துவத்துறை, அழகு கலைதுறையில் பணிபுரியும் இளம் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் மையங்கள் பரபரப்பாக காணப்பட்டது.  தற்பொழுது பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 % உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வார்டுகளிலும் இளம் பெண்கள் போட்டியிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Urban Local Body Election: பல்வேறு துறையைச் சேர்ந்த இளம்பெண்கள் கலக்கும் மதுரை தேர்தல் களம்..
இது குறித்து இளம் பெண் வேட்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.  22 வயதுடைய செவிலியர் இலக்கியா..,” என்னை போன்று மருத்துவ துறையில் பணி செய்யும் பெண்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதன் மூலம் சமூகத்திற்கு பல நல்ல விசயங்களை செயல்படுத்த முடியும். அடிப்படை தேவையை உணர்ந்து பணியாற்றுவார்கள். நான் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை மாநகராட்சி 14 வது வார்டில் போட்டியிடுகிறேன். எனக்கு மக்கள் வாய்ப்பளித்தால் மக்களின் அடிப்படை தேவையை முழுமையாக பூர்த்தி செய்வேன்” என தெரிவித்தார்.

Urban Local Body Election: பல்வேறு துறையைச் சேர்ந்த இளம்பெண்கள் கலக்கும் மதுரை தேர்தல் களம்..
 
ஐ.ஏ.எஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் 22 வயது இளம் மாணவி மோகனா...,” மதுரை மாநகராட்சி 28வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.  மக்களின் அடிப்படை வசதி, மக்களின் வளர்ச்சி மேம்பாட்டில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். தேர்வெழுத இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மக்கள் சேவையை செய்யும் வாய்ப்பை பெறும் முயற்சியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். இளம் பெண்கள் தயக்கம் இல்லாமல்  அரசியலுக்கு வந்து மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Urban Local Body Election: பல்வேறு துறையைச் சேர்ந்த இளம்பெண்கள் கலக்கும் மதுரை தேர்தல் களம்..
மதுரை மாநகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 12- வது வார்டில் போட்டியிடும் மருந்தாளர் (pharmacist) சாந்தா ஜெனிபர்....,”  மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வத்தில் தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்கள் வாய்ப்பு வழங்கினால் மருத்துவ சேவையை பொது சேவையாகவும்.  நான் போட்டியிடும் வார்டில்  அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவேன்”  என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Urban Local Body Election: பல்வேறு துறையைச் சேர்ந்த இளம்பெண்கள் கலக்கும் மதுரை தேர்தல் களம்..
லதா பிரியதர்ஷினி அழகு கலை நிபுணர், ”சிறு வயது முதலே மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது.  அதனை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது தேர்தலில் போட்டியிடுகிறேன்.   பெண்கள் தயக்கம் இல்லாமல் இந்த சமுதாயத்தில் அரசியல் வாழ்வில் சேவைப்பணியில் சாதிக்கலாம். மதுரை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் 8 வது வார்டில் போட்டியிடுகிறேன். மக்கள் நினைத்தால் கண்டிப்பாக வெற்றி பெற்று சேவையாற்றுவேன்” என தெரிவித்தார்.
 
Urban Local Body Election 2022 Tamilnadu madurai District town panchayat list, ward list, voters Details municipality election
மதுரை மண்டலம் 4ல் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 78வது வார்டு கோவலன் நகரில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் பி.இ எம்.பி.ஏ பட்டதாரியான மதுமிதா அசோகன், மதுரையை எரித்த கண்ணகியை போல கையில் சிலம்பை ஏந்திவாறு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். குற்றம் செய்யாத கோவலனுக்கு எப்படி தண்டனை கிடைத்ததோ அதே போல எந்த ஒரு குற்றம் செய்யாத மக்களுக்கு தொடர்ந்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த முறை அப்படி நிகழாமல் மக்கள் மக்கள் நீதி மையத்திற்கு வாக்கைச் செலுத்தி கட்சியை வெற்றி பெற வைப்பார்கள் என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2Anita Anand | அடுத்த கனடா பிரதமர் யார்? ரேஸில் தமிழ் பெண்! யார் இந்த அனிதா ஆனந்த்? | Canada“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
EPS IT Raid: கூட்டணிக்கு வரலனா அவ்ளோதான்; அதிமுகவுக்கு செக்வைத்த பாஜக? ஐ.டி ரைடால் சட்டசபைக்கு வராத இபிஎஸ்.!
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
LIVE | Kerala Lottery Result Today (07.01.2025): கேரள லாட்டரி முடிவுகள் வெளியீடு; முதல் பரிசு டூ ஆறுதல் பரிசு- முழு லிஸ்ட்!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
Delhi Assembly Election: டெல்லி சட்டமன்ற தேர்தல் எப்போது? வெளியானது அறிவிப்பு!
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
Embed widget