Gajendran Profile: ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? - முழு விவரம் இதோ
Arani Gajendran: ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
![Gajendran Profile: ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? - முழு விவரம் இதோ Who is Gajendran Arani AIADMK Candidate Lok Sabha Election 2024 Know Profile Biodata Gajendran Profile: ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் யார்? - முழு விவரம் இதோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/20/16525e5fad3a5a34bf8f558ed1d5dbcd1710916262965113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வரும் 22ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், இன்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்
அதிமுகவின் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஆரணி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த விக்ரமனின் மகன் கஜேந்திரன். இவர் இளநிலை பட்டப் படிப்பை படித்துள்ளார். தற்போது கட்டுமான பணிகளை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மிருதுளா , ஹாசினி என்ற 2 மகள்கள், விகாஷ் ஹரிகரன் என்ற மகனும் உள்ளார். அதிமுக கட்சியில் 2008 முதல் 2019 வரையில் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளராக 12 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 2019 முதல் ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். அதே போன்று திருவண்ணாமலை பண்டக சாலையில் தலைவராகவும் இருந்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) இன்று தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்காக மொத்தம் 1,556 வாக்குச்சாவடிகள் மேல் அமைக்கப்பட்டுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)