மேலும் அறிய

தேர்தலில் AI மூலம் பொய் பரப்புரை செய்தால் நடவடிக்கை! - விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரி அதிரடி உத்தரவு...

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் 2166 வாக்குச்சாவடிகள் மற்றும் 1138 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது

விழுப்புரம் மாவட்டத்தில் பணம் பொருள் கடத்தலை தடுக்க 126 பறக்கும் படை மற்றும் நிலையாண கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், மாவட்ட எல்லை பகுதிகளில் 23 சோதனை சாவடிகள் அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்தியாளர் சந்திப்பில் தொவித்ததாவது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேர்தல் நடத்தை விதிகள் (15.02.2026) அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளில் 2166 வாக்குச்சாவடிகள் மற்றும் 1138 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. மேலும், (23.02.2026)அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி விழுப்புரம் மாவட்டத்தில் 7,83,228 ஆண் வாக்காளர்களும், 8,03,154 பெண் வாக்காளர்களும் மற்றும் 211 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 15,86,653 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி (30.03.2026) அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டு (06.04.2026) அன்று வேட்டுபுமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், (07.04.2026) அன்று வேட்புமனு பரிசீலனை நாளாகவும் (09.04.2026) அன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசிநாளாக அறிவிக்கப்பட்டது. (23.04.2026) அன்று தேர்தல் நடைபெறும் நாளாகவும், (04.05.2026) அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 09 பறக்கும்படை குழுவும், 09 நிலையான கண்காணிப்புக்குழுவும் 24 மணி நேரமும் சுழற்ச்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பறக்கும்படை குழுவில் (FST) 01 கண்காணிப்பு அலுவலர், 01 -ஆயுதம் தாங்கிய காவலர் மற்றும் 01 வீடியோகிராப்பர் பணியமர்தப்பட்டுள்ளனர். ஒரு நிலையான கண்காணிப்பு குழுவில் (SST) 01 கண்காணிப்பு அலுவலர், 01 -ஆயுதம் தாங்கிய காவலர் மற்றும் 01 வீடியோகிராப்பர் பணியமர்தப்பட்டுள்ளனர். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிக்க 20 பொறுப்பு அலுவலர்கள் உட்பட 10,396 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரூ.50,000/- க்கு மேல் எடுத்துச்செல்லும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் 09 பிற மாநில எல்லை பகுதி சோதனைச்சாவடிகளும், 09 பிற மாவட்ட எல்லை பகுதி சோதனைச்சாவடிகளும், 05 மாவட்ட பகுதிகளில் சோதனைச்சாவடிகளும் என மொத்தம் 23 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 - 425 -7019 மற்றும் 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மேலும், 05-க்கு மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் வசதிக்காக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதற்கான அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget