lok sabha 2024: விருதுநகரில் விஜயகாந்த் மகனுடன் மோதும் ராதிகா! களம் யாருக்கு சாதகம்?
lok sabha 2024: மக்களவை தேர்தலில் விஜயபிரபாகர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் நேருக்கு நேர் போட்டியிடுகின்றனர்.
விஜயகாந்த் மகன் மகன் விஜயபிரபாகர் மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடவுள்ளதை தொடர்ந்து பிரபல தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.
மக்களவை தேர்தல்:
மக்களைவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. விருதுநகர் தொகுதியில், முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் மூத்த மகன் விஜய பிரபாகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சமீப காலங்களாக அரசியல் மேடைகளில் பங்கேற்பது, தொண்டர்களை சந்திப்பது உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், முதன்முறையாக தேர்தலில் களம் காண்கிறார்.
பாஜக கூட்டணி சார்பாக , பாஜக கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மாணிக்கம் தாக்கூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் வரையில், இன்னும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை.
யாருக்கு சாதகம்:
தேமுதிக கட்சியானது விருதுநகரில் செல்வாக்கு இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளது. விருதுநகர் மாவட்டமானது, விஜயகாந்த் பிறந்த மாவட்டம் என்பதால், அந்த ஊர் மக்கள் ஆதரவு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
கடந்த கால தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக கட்சி வெற்றி பெற்றது. 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் தேமுதிக 6.6 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது. மேலும், சமுதாய வாக்குகளும் கிடைக்கும் என சிலர் கருத்துகளை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் விருதுநகரில் வாக்கு வங்கி இருப்பதாக தேமுதிக நம்பிக்கை கொண்டுள்ளது.
ராதிகா சரத்குமார் போட்டியிடும் விருதுநகரில், சமுதாய வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், பாஜகவின் ஆதரவும் அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, ஏற்கனவே அத்தொகுதியில் எம்.பி-யாக உள்ள மாணிக்கம் தாக்கூர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
விஜயகாந்த் - ராதிகா:
இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் அதிமுக மற்றும் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் பெரும் பேசும் பொருளானது. ஏனென்றால், விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து நானே ராஜா நானே மந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது விஜயகாந்தின் மகனும், விஜயகாந்த்-உடன் நடித்த நடிகையான ராதிகாவும் எதிர்த்து போட்டியிடுவது பேசு பொருளாகி உள்ளது. இதையடுத்து, விருதுநகர் தொகுதி பிரபலங்கள் களமிறங்கும் தொகுதியாக மாறியுள்ளது.
Also Read: Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!