மேலும் அறிய

TN Election 2026: இனி இவர்களும் தபால் வாக்கு அளிக்கலாம்; தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு - யாரெல்லாம் தெரியுமா?

தபால் வாக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசின் 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் தபால் வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் 5 துறைகளை சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து கழகம், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து காவலர்கள், சிறைத்துறை பணியாளர்கள், தீயணைப்பு, மீட்புத் துறை பணியாளர்கள் ஆகியோர் தபால் வாக்கு பதிவு செய்யலாம்.

இதுதொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில்,

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதியோர். மாற்றுத்திறனாளிகள் (PwD), சேவை வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள வாக்காளர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வசதி செய்கிறது.

1. அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களுக்கான அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மார்ச் 15, 2026 அன்று அறிவித்தது. அட்டவணையின்படி மார்ச் 16, 2026 அன்று அசாம். கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 60(c)-ன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் (PwDs) என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு மூலம் தங்கள் வாக்கைச் செலுத்தலாம் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

3. இத்தகைய வாக்காளர்கள் படிவம் 12D (Form 12 D)-ஐப் பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) சமர்ப்பிக்க வேண்டும். வாக்குச் சேகரிக்கும் குழுக்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளைச் சேகரிப்பார்கள். இதற்கான கால அட்டவணை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டு வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.

4. தேர்தல் தேதியன்று அத்தியாவசியப் பணிகளில் (Essential services) இருக்கும் வாக்காளர்கள், தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer) மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம். தீயணைப்புத் துறை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்து,
அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் போன்றவை இந்த வசதியின் கீழ் வருகின்றன.
 
5. தேர்தல் நாள் செய்திக் சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 'வராத வாக்காளர்கள்' (Absentee voters) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களும் தபால் வாக்கு வசதிக்குத் தகுதியுடையவர்கள்.

6. தேர்தல் பணியில் இருக்கும் ஒரு வாக்காளர் தனது தபால் வாக்கைப் பெற்று, அதில் தனது வாக்கை பதிவு செய்து, வசதி மையத்தில் (Facilitation center) சமர்ப்பிக்க வேண்டும். வசதி மையத்தில் வாக்காளர் முழுமையான ரகசியத்துடன் வாக்களிப்பதை உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

7. சேவை வாக்காளர்களுக்கு (Service voters) தபால் வாக்குகள் மின்னணு முறையில் அனுப்பப்படும் (ETPBS Electronically Transmitted Postal Ballot System). வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் இவை அனுப்பப்படும். இதற்கான தபால் செலவை சேவை வாக்காளர்கள் ஏற்க வேண்டியதில்லை.

8. பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் நாளான மே 4, 2026 அன்று காலை 8:00 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை (ROs) சென்றடைய வேண்டும்.

9. தேர்தல் நடத்தும் அலுவலர் (RO) மாவட்ட தேர்தல் அலுவலர் (DEO) மேற்கண்ட விதிகள் குறித்து அரசியல் கட்சிகள்/போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget