Urban Local Body Election: விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் 210 பதவிகளுக்கு 935 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
Villupuram Urban Local Body Election 2022: விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சி, 7 பேரூராட்சிகளில் 210 பதவிகளுக்கு 935 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 3 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 102 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோடக்குப்பம் உள்ளிட்ட 3 நகராட்சி, அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் 210 பதவிகளுக்கு 935 பேர் களத்தில் உள்ளனர். இதில் விக்கிரவாண்டியில் ஒருவர், அரகண்டநல்லூரில்ஒருவர் என இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி : விழுப்புரம் நகராட்சியில்,42 வார்டுகளில், 308 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 97 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 204 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திண்டிவனம் நகராட்சி: திண்டிவனம் நகராட்சியில்,33 வார்டுகளில், 238 வேட்பு தாக்கல் செய்தனர் . அதில் 20 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 52 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 166 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோட்டக்குப்பம் நகராட்சி : கோட்டக்குப்பம் நகராட்சியில்,27 வார்டுகளில், 161 வேட்பு தாக்கல் செய்தனர் அதில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு இல்லை. 16 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 145 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வளவனூர் பேரூராட்சி : வளவனூர் பேரூராட்சியில்,15 வார்டுகளில், 55 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 8 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
விக்கிரவாண்டி பேரூராட்சி : விக்கிரவாண்டி பேரூராட்சியில்,15 வார்டுகளில், 70 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் ஒருவர் வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 8 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 60 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
செஞ்சி பேரூராட்சி : செஞ்சி பேரூராட்சியில்,18 வார்டுகளில், 136 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் அதில் 14 வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டது. 45 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மரக்காணம் பேரூராட்சி : மரக்காணம் பேரூராட்சியில்,18 வார்டுகளில், 137 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் இருவர் வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 34 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 101 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி : திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில்,15 வார்டுகளில், 81 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் ஒருவர் வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 25 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 55 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அரகண்டநல்லூர் பேரூராட்சி : அரகண்டநல்லூர் பேரூராட்சியில்,12 வார்டுகளில், 49 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் ஒருவர் வேட்பு மனு நிராகரிக்கபட்டது. 13 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 34 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அனந்தபுரம் பேரூராட்சி : அனந்தபுரம் பேரூராட்சியில்,15 வார்டுகளில், 66 வேட்பு தாக்கல் செய்தனர், அதில் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு இல்லை. 16 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மொத்தமாக 50 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 1301 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதில் 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் மனுக்கள் வாபஸ் பெரும் கடைசி நாளான இன்று 314 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த உள்ள 210 பதவிகளுக்கு தற்போது 935 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.