Villupuram Election Results 2024: விழுப்புரத்தில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ...வெற்றி யார் பக்கம்?...எகிறியது எதிர்பார்ப்பு
Villupuram Lok Sabha Election Results 2024 : விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது, முதலாவதாக தபால் வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.
Villupuram Lok Sabha Election Results 2024: விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
விழுப்புரம் villupuram பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. முதலவதாக 9001 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி Villupuram Lok Sabha Election 2024 உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 76.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்வாக்காளர்கள் 5,69,070 பெண் வாக்காளர்கள் 5,80,256 மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்தனர். இதில் 8424 தபால் வாக்குகள் பதிவாகின.
விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 ஸ்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கபட்டது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு villupuram lok sabha Election தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் வைக்கப்பட்டு ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி தலைமையில் சீல் வைக்குப்பட்டது. விழுப்புரம் வாக்கு என்னும் மையத்திற்கு துணை ராணுவப்படை, தமிழக சிறப்பு காவல் படை, தமிழக காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. விழுப்புரத்தில் வாக்காளர் அதிகாலையில் இருந்தே வாக்களித்து வந்தனர். விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1068 வாக்குச்சாவடி மையங்களில் 1966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 51 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.
விழுப்புரம் தனி தொகுதியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பெண் வாக்காளர்களும் மாற்றுபாலினத்தவர் 209 பேர் என மொத்தம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர் உள்ளனர். இதற்காக 4152 வாக்கு பதிவு கருவிகளும், 2076 கன்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2249 வி.வி.பேட் எனப்படும் உறுதிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பிற்காக 2200 காவல் துறையினரும், 344 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், 6804 பேர் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
76.47 சதவிகித வாக்குகள் பதிவு
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில் 76.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 5,69,070, பெண் வாக்காளர்கள் 5,80,256, மாற்று பாலினத்தவர் 81 பேர் என மொத்தமாக 11,49,407 வாக்காளர்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர். 2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட வாக்குகளை ஒப்பிடுகையில், 2019 விழுப்புரம் தொகுதி அங்கு வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் எண்ணிக்கை 14,43,436. பதிவான வாக்குகள் 11,28,998 பதிவான வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 78.21%. 2024 ஆண்டு வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 15,03,115. பதிவான வாக்குகள் 1104639. பதிவான வாக்குகள் சதவீதம் 73.49%. 2019 இன் படி 3,19,438 பேர் வாக்களிக்கவில்லை.