மேலும் அறிய

இந்தியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது - வானதி சீனிவாசன்

நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக்கும் இலக்குடன், இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக உருவாக்கப்படுவார்கள், ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின், மகளிர் சுய உதவி்க்குழுக்களை மேம்படுத்துதல், பொது இடங்களில் பெண்கள் கழிவறை, காவல் நிலையங்களில் சக்தி டெஸ்க், பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் என பெண்களுக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை பெண்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழுக்கு மகுடம் சூட்டும் அறிவிப்புகள்

உலகின் தொன்மையான செம்மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வெளியே, மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும், ஐ.நா., சபை போன்ற உலக அரங்குகளில் தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் சிறப்புகள் குறித்தும், தமிழின் தொன்மையான இலக்கியங்கள் குறித்தும் தொடர்ந்து பேசிய ஒரே பிரதமர் மோடி மட்டுமே. அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டும் அறிவிப்புகள் பாஜக அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும்

கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் வீடுகள்தோறும் குடிநீர், கழிவறை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு, திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு, மக்கள் மருந்தகத்தில் 80 சதவீத தள்ளுபடியில் மருந்துகள், அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி குடும்பங்களுக்கு இலவச வீடுகள், முத்ரா கடன் 10 லட்சம்  ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்வு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்கு  ஓய்வு மையங்கள், காசி விஸ்நாதர் கோயில் போல நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் சீரமைப்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், சுற்றுலா மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேர்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும். மக்கள் பாஜகவுக்கு 400க்கும் அதிகமான எம்.பி.க்களுடன் வரலாறு காணாத வெற்றியை வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget