நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022: சேலம் மாநகராட்சியில் 50 வார்டுகளை கைப்பற்றிய திமுக கூட்டணி..
சேலம் மாநகராட்சியில் பாஜக, பாமக, மநீம, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடமில்லை.
நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 27 பேரூராட்சிகளை கைப்பற்றியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்த இடங்கள் 699
தி.மு.க - 421
அ.தி.மு.க 147
பா.ம.க - 27
தேமுதிக - 1
பாஜக - 3
காங்கிரஸ் 17
கம்யூனிஸ்ட் - 5
விடுதலை சிறுத்தை - 3
சுயேச்சை - 75
சேலம் மாநகராட்சி பொருத்தவரை திமுக சார்பில் போட்டியிட்டார் 47 இடங்களில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு 7 இடங்கள் மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
முக்கியமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் 23 வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார். சேலம் மாநகராட்சி 41வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பூங்கொடி மற்றும் 54 வது வார்டில் போட்டியிட்ட பூங்கொடியின் மகள் கனிமொழி வெற்றி பெற்றுள்ளனர்.
சேலம் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 2 வது வார்டில் போட்டியிடும் முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், 15 வது வார்டு போட்டியிடும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட உமாராணி, 26 வது வார்டில் போட்டியிடும் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கலையமுதன், 28 வது வார்டில் போட்டியிடும் ஜெயகுமார் மற்றும் 6 வது வார்டில் போட்டியிடும் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஆறு நகராட்சிகளில் 5 நகராட்சிகள் திமுக கைப்பற்றியுள்ளது.
தாரமங்கலம் நகராட்சி (27/27)
திமுக - 12
அதிமுக - 4
பாமக - 4
சுயேச்சை - 7
இடங்கணசாலை நகராட்சி (27/27)
திமுக - 15
அதிமுக - 2
பாமக - 8
சுயேட்சை - 2
மேட்டூர் நகராட்சி 30/30
திமுக - 20
அதிமுக - 5
சுயேட்சை - 5
நரசிங்கபுரம் நகராட்சி 18/18
திமுக- 8
காங்கிரஸ் - 2
அதிமுக - 6
சுயேட்சை - 2
எடப்பாடி நகராட்சி 30/30
திமுக - 16
காங்கிரஸ் - 1
அதிமுக - 13
ஆத்தூர் நகராட்சி 33/33
திமுக - 25
காங்கிரஸ் - 1
அதிமுக - 4
சுயேட்சை - 3
குறிப்பாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடி நகராட்சியை 50 ஆண்டுகளில் முதல் முறையாக திமுக கைப்பற்றியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 27 பேரூராட்சிகள் திமுக கைப்பற்றியுள்ளது.
திமுக - 27
அதிமுக - 1
தனி பெரும்பான்மை இல்லாதவை - 3
சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை திமுக கூட்டணி வெற்றி பெற்று சேலம் அதிமுகவின் கோட்டை என்று இருந்ததை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி அதிமுகவின் கோட்டையை உடைத்து உள்ளது.