மேலும் அறிய

Urban Local Body Election: சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி - சுயேச்சையாக களம்காணும் திண்டிவனம் திமுகவினர்

Tindivanam Urban Local Body Election 2022: திண்டிவனத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட் கிடைக்காத விரக்த்தியில் சுயேட்சையாக களம் காணும் திமுகவினர்

திண்டிவனத்தில் தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், அதிருப்தி நிலவுவதால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பலர் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் காண தயாராகி வருகின்றனர். திண்டிவனம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஒரு சில வார்டுகளில் சலசலப்பு இருந்தாலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலையிட்டு, சரி செய்துவிட்டார். இதனால் அ.தி.மு.க., வேட்பாளர்கள் சிக்கலின்றி வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தி.மு.க., நகர செயலாளர் கபிலன் பரிந்துரை செய்தவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

Urban Local Body Election: சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தி - சுயேச்சையாக களம்காணும் திண்டிவனம் திமுகவினர்

இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர். வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன், நகர செயலாளர் கபிலன் அமைச்சர் மஸ்தானை நேரில் சந்தித்து, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சீட் வழங்குமாறு கோரிக்கை வைத்தார். இந்த சூழ்நிலையில் நேற்று வெளியான தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், கபிலன் ஆதரவாளரான நகர அவைத்தலைவர் செல்வராஜ் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. மற்றவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், சீட் கேட்டு மறுக்கப்பட்ட கபிலன் ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே தங்கள் வார்டுகளில் பொது மக்களிடம் ஓட்டு கேட்டு வந்துள்ள நிலையில், தற்போது சீட் இல்லையென்று உறுதியானதை தொடர்ந்து, கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றனர். 

திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகளில் முதல் கட்டமாக 17 வேட்பாளர்கள் பட்டியல்:

சாந்தகுமார் – 1 வது வார்டு 

செல்வகுமாரி – 2 வது வார்டு

சங்கரி – 3 வது வார்டு

மதுரம்மாள் – 6 வது வார்டு

சத்தியராஜ்- 8 வது வார்டு

ேஹமமாலினி – 11 வது வார்டு

ஏழுமலை- 12 வது வார்டு

தேவி – 14 வது வார்டு

மகேஸ்வரி – 15 வது வார்டு

ராகவேந்திரன்- 16 வது வார்டு

செந்தில்குமார்- 19 வது வார்டு

சக்திவேல்- 20 வது வார்டு

கமலா- 26 வது வார்டு

கஸ்துாரி – 39 வது வார்டு

மணிகண்டன்- 31 வது வார்டு

அனந்தராமன்- 32 வது வார்டு,

நாரயணன் - 33 வது வார்டு  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget