மேலும் அறிய
Advertisement
பேரூராட்சி கவுன்சிலர் பதவியை 24 லட்சத்திற்கு ஏலம் விட முயற்சி - ஆட்சியர், எஸ்.பி நேரில் ஆய்வு செய்ததால் பரபரப்பு
Cuddalore Urban Local Body Election 2022: மதுராந்தகம் அருகே பேரூராட்சி கவுன்சிலர் பதவி ஏலம் மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரால் நிறுத்தப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு 14 வது வார்டில் கவுன்சிலர் பதவி ஏலம் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நேற்றைய முன்தினம் 24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டதால் ஏலம் நிறுத்தப்பட்டது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் மொத்தம் 29 வார்டுகள் உள்ளது. இதில் ஆலமர குப்பம், தண்டுமாரியம்மன் குப்பம், ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் குப்பம், ஆகிய 3 பகுதிகள் உள்ளடக்கிய பழைய 10ஆவது வார்டு தற்பொழுது மறுசீரமைப்பு, 14வது வார்டுடாக உள்ளது. இப்பகுதியில் தண்டுமாரியம்மன் குப்பம் ஒரு சமூகத்தினர் 700 பேரும், ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் குப்பம் மற்றொரு சமூகத்தினர் 480 பேரும், என ஆக மொத்தம்1180 வாக்காளர்களை கொண்டது.
இந்தப் பகுதியில் தண்டுமாரியம்மன் கோவில் குப்பம் மக்கள் அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு 24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டு அந்த ஏல தொகை முழுவதும், அதிக வாக்காளர்களை கொண்ட தண்டு மாரியம்மன் கோயில் குப்பம் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் குப்பம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துனர்.
இது குறித்து அப்போது அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ராகுல்நாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் நேற்று இரவு புகார் அளித்தனர். இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை அறிந்த அந்த வார்டு மக்கள் ஏலத்தை கைவிட்டனர். இதேபோல் 13வது வார்டிலும் ஏலம் விடுவதற்கான பணிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற ஏலம் விடும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion