Yogi Adityanath Win: 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. உபியில் மாஸ் காட்டிய யோகி ஆதித்யநாத்!
UP Election Result 2022: கோரக்பூர் சதார் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் யோகி வெற்றி பெற்றார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சதார் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 மாநிலங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கோரக்பூர் சதார் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார்.
#UttarPradeshElections | Chief Minister Yogi Adityanath wins Gorakhpur Urban seat
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 10, 2022
(File photo) pic.twitter.com/LC41xSFwXk
முழு பதவிக்காலம் முடிந்த பிறகும் அதிகாரத்தைத் தக்கவைக்கும் முதல் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆவார். இந்தத் தேர்தலில் பாஜகவின் முக்கியப் போட்டியாளரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட முந்தைய முதலமைச்சர் யாரும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. இது தவிர, பாஜகவில் இருந்து தொடர்ந்து மாநிலத்தின் முதல் பதவிக்கு திரும்பிய முதல் நபராகவும் யோகி ஆதித்யநாத் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்