மேலும் அறிய

TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?

சென்னையில் இன்று தவெக-வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் வெளியிடுகிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஒவ்வொரு கட்சியினரும் மிகவும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் முதன்முறையாக அரசியல் களத்தில் தனிதது களமிறங்கியுள்ள தவெக மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தவெக தேர்தல் வாக்குறுதிகள்:

மிகப்பெரிய நடிகராக உலா வரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால், அக்கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று வெளியிடுகிறார்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை விஜய் இன்று மதியம் 3 மணியளவில் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் 800 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய வாக்குறுதிகள்:

தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகளாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ், அண்ணன் வீட்டு சீர், மாதந்தோறும் 2500 என பல வாக்குறுதிகளை விஜய் தனது தேர்தல் பரப்புரையின்போது அறிவித்துள்ளார். ஒவ்வொரு பரப்புரையின்போதும் பல்வேறு வாக்குறுதிகளை அவர் வெளியிட்டு வருகிறார். அவற்றின் தொகுப்பாகவும் எஞ்சிய தேர்தல் வாக்குறுதிகளையும் இணைத்து விஜய் இன்று வெளியிடுகிறார்.

வாக்காளர்களை கவர்வதற்காக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் பல்வேறு திட்டங்களை தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு போட்டியாக விஜய்யும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இன்றைய வாக்குறுதியில் கூடுதலாக என்ன அறிவிப்பு இருக்கப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேரில் வரவேண்டாம்:

இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகள், பள்ளி மாணவ, மாணவிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள், பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று தவெக பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி என பெரிய கூட்டணியுடன் களமிறங்குகிறது. அதிமுக-வும் பாஜக, பாமக, தமாக, அமமுக, தமமுக என பலம்பொருந்திய கூட்டணியாகவே களமிறங்கியுள்ளது. 

குறிவைக்கப்படும் பெண் வாக்காளர்கள்:

திரைப்படங்கள் மூலமாக அதிகளவு பெண் ரசிகைகளை தனக்கென கொண்ட விஜய், தனது வாக்குறுதியில் பெண்களை கவரும் வகையிலே அதிகளவு வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார். இதனால், இன்றைய தேர்தல் வாக்குறுதியிலும் பெண்களுக்கான அறிவிப்புகள் அதிகளவு இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் சக்தியாக பெண் வாக்காளர்களே உள்ளனர். இதனால், இவர்களின் வாக்குகளை கவர மாதந்தோறும் உரிமைத்தொகை, இலவச கூப்பன் திட்டம், அண்ணன் சீர் என ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல, முதல் தலைமுறை வாக்காளர்கள் 13 லட்சம் பேரும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தேர்தலில் ஏற்படுத்துவார்கள் என்று கருதப்படுகிறது. 

TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget