மேலும் அறிய
Advertisement
Watch Video: என் உயிர் தோழா... வைரலாகும் தேமுதிகவின் விஜயபிரபாகரன் வெளியிட்ட வீடியோ...!
தேமுதிகாவிற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க கோரி விஜய்காந்த் மகன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணி முதல் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் தேமுதிக கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாற்றத்தை காண வேண்டும் என்றால் தேமுதிகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
முன்னதாக
மதுரை மாநகராட்சியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஆலங்குளம், ஜவகர்லால் நேரு நகர் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது பிரச்சாரத்தின் போது பிரேமலதா..., ”கேப்டன் விஜயகாந்த் நலமாக உள்ளார். மதுரை மக்களை நலம் விசாரிக்க சொன்னார் விஜயகாந்த். ஆட்சி, அதிகார, பண பலத்தை எதிர்த்து தே.மு.தி.க., வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். எல்லா வார்டுகளிலும் பணம் கொடுப்பதில் தான் தி.மு.க.வும், அ.தி.மு.கவவும் நினைக்கிறது. இரு கட்சிகளும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் கடந்த 50 ஆண்டுகளாக எடுக்கவில்லை. பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்ற நிலையில் வழங்கப்பட்டன. 1000 ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர்.
தி.மு.க, அ.தி.மு.க இரு கட்சிகளும் 60 ஆண்டுகளாக பொய் வாக்குறுதிகளை மட்டுமே தெரிவித்து ஆட்சி அமைத்து வருகின்றனர். விஜயகாந்திற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்து இருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாற்றப்பட்டு இருக்கும். ஏன் மக்கள் மறந்தார்கள் என தெரியவில்லை. இனியும் எங்களுக்கென்று ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் வந்த காரணத்தால் 1000 ரூபாயை விரைவில் தருவதாக ஸ்டாலின் சொல்கிறார்.
மகளிர் உரிமை தொகையை கொடுக்காமல் மீண்டும் ஏமாற்றினால் முதலமைச்சரால் தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது. நல்லா இருந்த மதுரை சிட்டியை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சீரழித்தது மட்டுமே மிச்சம்” என வேதனை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion