TN Urban Local Body Election 2022: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்.. எத்தனை சதவிகிதம்? 9 மணி நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் , சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மந்தமாக காணப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 3.96% சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளன. சென்னையில் முன்பெல்லாம், வாக்களிக்க வரும்போது வாக்களார்கள் வரிசையில் நின்று வாக்களிப்பார்கள். ஆனால், வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் அளவிற்கு கூட இல்லாமல், வந்து 5 நிமிடத்தில் வாக்களித்து சென்றுவிடுகின்றனர். தலைநகர் சென்னையில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, தமிழ்நாட்டில் சென்னையில் தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது.
மற்ற மாவட்டங்கள் 9 மணி நிலவரம்
காஞ்சிபுரம் - 11.03%, கடலூர் - 10.11%, தி.மலை - 18.5%, விருதுநகர் - 8.9%
ராமநாதபுரம் - 8.88%, தஞ்சை - 6.1%, புதுக்கோட்டை - 11%, சேலம் - 12.97%, தேனி - 12%
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்