TN Urban Local Body Election 2022 : கள்ள ஓட்டா? அது வேற முருகன்! இரண்டு முருகனால் குழம்பிப்போன அண்ணாமலை! நடந்தது இதுதான்!
திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம். ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது - அண்ணாமலை
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, இது வாக்குச்சீட்டு மாறிய குழப்பதால் நடந்ததாகவும், அமைச்சரின் வாக்கை யாரை செலுத்தவில்லை என்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக தகவல் கொடுத்தார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணமலை கூறினார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில்,
மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’ எனப்பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. திமுக கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம். ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு திரு @Murugan_MoS அமைச்சரின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது.
— K.Annamalai (@annamalai_k) February 19, 2022
மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?
@ECISVEEP
அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது@arivalayam கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம்!
— K.Annamalai (@annamalai_k) February 19, 2022
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது
அண்ணாமலையின் இந்த டுவிட்டர் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக நமது ஏபிபிநாடு நிருபர் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் விசாரித்தார். அப்போது, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை யாரும் போடவில்லை. எம்.முருகனுக்கு பதிலாக, எல்.முருகனின் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. மத்திய அமைச்சர் எப்போது வந்தாலும் தனது வாக்கை செலுத்தலாம் என்று கூறினார். மேலும், இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். வாக்குச்சீட்டு மாறிய ஏற்பட்ட குழப்பத்தால் நடந்ததை, தவறுதலாக அண்ணாமலை ட்விட் செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
கள்ள ஓட்டு விவகாரம்: அண்ணாமலை புகார் - தேர்தல் ஆணையர் மறுப்பு https://t.co/wupaoCQKa2 | https://t.co/wupaoCQKa2 | #TnLocalBodyElection #TNElection2022 #Election2022 #LocalBodyElection #TNElections #Annamalai #BJP pic.twitter.com/gLtg6Bq7lT
— ABP Nadu (@abpnadu) February 19, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்