TN Urban Local Body Election 2022 : சட்டசபையில் சைக்கிள்... உள்ளாட்சியில் கார்... என்ன சொல்ல வருகிறார் விஜய்?
நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக சென்று நீலாங்கரை வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இந்தநிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களால் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக சென்று நீலாங்கரையில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி 192 வது வார்டு வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார்.
இருப்பினும், விஜயை பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் வாக்குசாவடியில் குவிந்ததால் பாதுகாப்பு காரணமாக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், நடிகர் விஜய் கடந்த சட்டசபை தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்குப்பதிவு செய்த காட்சி வைரலானதை தொடர்ந்து,தற்போது சிவப்பு நிற காரில் வருகை புரிந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டசபை தேர்தலின்போது சைக்கிள் :
நடிகர் விஜய் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது சிவப்பு மற்றும் கருப்பு நிற கொண்ட சைக்கிளில் சென்று தனது வாக்கினை செலுத்தினார். பெரும்பாலும் காரில் மட்டுமே சென்று வாக்கு செலுத்தும் விஜய் அன்று சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தியது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததை சொல்லாமல் சொல்கிறாரா..? விஜய் சென்று கேள்வி எழுந்தது.
தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும்,சிவப்பு மற்றும் கருப்பு நிற சிவப்பு மற்றும் கருப்பு நிற வந்து திமுக கட்சிக்கு ஆதரவு அளித்ததாகவும் கருத்துகள் பரவியது.
சுமார் தனது வீட்டில் இருந்து அவர் அரை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வேல்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களித்தார். அப்பொழுது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து தெரிவித்து வந்த நேரத்தில் விஜய் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸ் இதுகுறித்து விளக்கமளித்தார். அதில், வாக்குச்சாவடி மையம் மிக அருகில் இருந்ததால் நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். இதில், எந்தவொரு அரசியலும் இல்லை என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் காரில் வந்த விஜய் :
இன்று உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த விஜய் மீண்டும் திமுக கட்சிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் பரவி வருகிறது. சிவப்பு நிற காரில் வந்த விஜய், கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்துள்ளார். அதன் காரணமாகவே இந்த செய்தி தீயாய் பரவி வருகிறது.
மேலும், இந்த ஆட்சியிலும் பெட்ரோல் விலை 100 ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பொழுது பெட்ரோல் விலை உயர்ந்தது நடிகர் விஜய்க்கு தெரியவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்