TN Urban Election Results: நாளை வாக்கு எண்ணிக்கை - மதுபான கடைகள் மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மாநில தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதனால், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் நாளை மதுபானக் கடைகள் அடைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை மட்டும் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு https://t.co/wupaoCzH82 | #TASMAC #Namakkal pic.twitter.com/Z27ef2AUNd
— ABP Nadu (@abpnadu) February 21, 2022
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் சம்பந்தமான வேறு சில முக்கிய தகவல்கள்:
#JUSTIN | கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்https://t.co/wupaoCzH82 | #Coimbatore #TNElection #MadrasHighCourt pic.twitter.com/SBRYRrYWjU
— ABP Nadu (@abpnadu) February 21, 2022
#BREAKING | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது https://t.co/wupaoCz9iu | #Jayakumar #AIADMK #localbodyelection2022 #DMK pic.twitter.com/tJ4eXvUff4
— ABP Nadu (@abpnadu) February 21, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்