DMK Urban Election Results: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றியை சுவைக்க இருக்கும் திமுக ! முழு விபரம் உள்ளே!
DMK Urban Election Results 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சிறப்பான வெற்றியை பதிவு செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பல இடங்களில் வெற்றியை பெற்று வருகிறது. தற்போது வரை திமுக தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர், கும்பகோணம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இவை தவிர திமுக வேட்பாளர்கள் தற்போது வரை 224 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 976 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 3373 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியுள்ளனர்.
கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெற்ற முதல் தேர்தலில், 45 வார்டுகளில் தற்பொழுது வரை 33 வார்டுகள் எண்ணபட்ட நிலையில் 24 வார்டுகளை கைபற்றி திமுக கடலூர் மாநகராட்சியை முதல் முறையாக கைபற்றி உள்ளது.
கோவை,நெல்லை, கடலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக அதிகமான பேரூராட்சிகளை கைப்பற்றி உள்ளது. இன்னும் நிறையே இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. காரமடை, மேட்டுப்பாளையம், கூடலூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, மதுக்கரை, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் திமுக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 198 இடங்களில் இதுவரை திமுக 149 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை அதிமுக 18 இடங்களிலும், சுயேச்சை 7, காங்கிரஸ் 4, சிபிஎம் 1, மதிமுக 1, பாஜக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இன்று மாலைக்குள் வெளியாகும் முடிவுகளில் திமுக மேலும் அதிக இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்