மேலும் அறிய

TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிகவும் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வரும் மே 4ம் தேதி வெளியாகிறது. 

வாக்குகள் எண்ணப்படுவது எப்படி?

தமிழ்நாடு மட்டுமின்றி அசாம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள், துணை பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கும். இந்த வாக்கு எண்ணிக்கையை நேரில் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்கள் முகவர்கள் பார்வையிடுவார்கள்.

2. தேர்தல் பார்வையாளர்கள், துணை பார்வையாளர்கள் காலை 5.30 மணி முதல் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரத் தொடங்குவார்கள்.

3. ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறைக்கும் ஒரு மேற்பார்வையாளரும், வேட்பாளர்களின் முகவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

4. தேர்தல் அதிகாரி முன்னிலையில்  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

5. அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

6. வாக்கு எண்ணிக்கையை தொடங்கியவுடன் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

6. வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு எண்ணிலும் ( சின்னத்திலும்) எவ்வளவு என்பதை ஒவ்வொரு சுற்றிற்கும் அறிவிப்பார்கள். அதை அந்தந்த வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் சரிபார்த்துக் கொள்வார்கள்.

7. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், மேற்பார்வையாளர்கள் வாக்குகளின் எண்ணிக்கையை கையொப்பமிட்டு வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்களிடம் ஒப்படைப்பார். 

8. அவர்களும் அதை சரிபார்ப்பார்கள். பின்னர், தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டபின் அந்த சுற்று வாக்கு எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

9. வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்கு இயந்திரம், விவி பேட் இயந்திரங்களின் சீட்டுகள் சரிபார்க்கப்படும்.

10. இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் விவி பேட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டு, சின்னங்கள் சரிபார்க்கப்படும்.

11. வாக்கு எண்ணிக்கை மொத்தம் 16 சுற்றுகள் நடைபெறும். 

12. வாக்கு எண்ணிக்கையின் மொத்த நடவடிக்கையும் வீடியோவாக பதிவு செய்யப்படும். 


வாக்கு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்படும். பொதுவாக வாக்கு எண்ணிக்கையின்போது காலை 11 மணிக்கே பல தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் யார்? ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பது தெரிந்துவிடும்.

TN Election 2026 ECI: அடேங்கப்பா..! தமிழகத்தில் ஒரு பூத்தில் கூட மறுவாக்குப்பதிவு இல்லை - தேர்தல் ஆணையம் தகவல்

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
தேர்தல் பிரச்சாரம் ஓவர்! 6 மணிக்கு பிறகு இந்த விஷயத்தை செய்யக்கூடாது! என்னென்ன கட்டுப்பாடுகள்?
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் நாளை மாலை 6 மணிக்கு மேல் இதையெல்லாம் செய்தால் சிறை நிச்சயம் - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget