மேலும் அறிய

Tiruvannamalai Election Results 2024: திருவண்ணாமலையில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை

Lok Sabha Election Results 2024: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு தீவிர பரிசோதனை பிறகே முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டப் வாக்குப் பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்தல் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. 

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலை வகிக்கிறார்.

திமுக - 21967
அதிமுக -12222
பாஜக -6459
நாம் தமிழர் -3110

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 31 பேர் களத்தில் இருக்கிறார்கள். 1722 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. அதே போன்று ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சாலையில் உள்ள சண்முகா அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு 84 மேசைகள் அமைக்கப்பட்டு 23 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. 

இதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ண தனியாக ஆறு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் வாக்கு என்னும் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் என அனைவரும் வாக்கு என்னும் மையத்திற்குள் செல்போன், மடிக்கணினி, ஐபேட் போன்ற மின்சாதன பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வாக்கு எண்ணும் மையம்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அரசு அலுவலர்கள் வேட்பாளர்கள் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனை முழுமையாக கடைப்பிடித்து அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க மாவட்ட தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாக்கு என்னும் பணி முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அதிலும் மின்னணு வாக்குகளை எண்ணும் ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்படுகிறது. 

பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அரசு பொறியியல் கல்லூரி முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை வாக்கு என்னும் மையத்தில் அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் என அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget