மேலும் அறிய

ரூ.1.70 லட்சம் செலவு; 26 மணி நேர பயணம் - கடல் கடந்து வந்து வாக்கு செலுத்திய மருத்துவர்

26 மணி நேரம் பயணம் செய்து நியூசிலாந்தில் இருந்து கடலூருக்கு வாக்களிக்க வந்த மருத்துவர்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. தனது ஜனநாயக கடமையான ஓட்டை செலுத்த வேண்டும் என்று  முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து வாக்காளர்களும் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தினர்.
 
கடலூர் செம்மண்டலம் என்ற ஊரை சேர்ந்தவர் வினோத் (வயது 46). இவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். 
 
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை தனது சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பியுள்ளார். இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊரான கடலூருக்கு நேற்று இரவு வந்தார். 

ரூ.1.70 லட்சம் செலவு; 26 மணி நேர பயணம் - கடல் கடந்து வந்து வாக்கு செலுத்திய மருத்துவர்
 
வாக்குப்பதிவு நாளான இன்று கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
 
பின்னர் இதுகுறித்து டாக்டர் வினோத் கூறுகையில், “வெளிநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
 
26 மணி நேரம் பயணம் செய்து ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனது வாக்கினை செலுத்த வந்த மருத்துவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்

Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா

ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
IPL 2026 Auction: மேட்ச் வின்னர்களை கேட்கும் ஐபிஎல் அணிகள், கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள் யார்? டாப் லிஸ்ட்

Top 10 News Headlines:  811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர், விமான நிலையங்கள் மூடல், ரோ-கோ ஷோ? - 11 மணி வரை இன்று

வாடகை வீட்டில் குடியேறீங்களா.! மாத வாடகை, அட்வான்ஸ் எவ்வளவு கொடுக்கனும்- வெளியான குஷியான விதிமுறைகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை

Embed widget