TN Exit Poll Result 2024: தமிழ்நாட்டில் யாருக்கு எவ்வளவு இடம்..! அதிமுக, பாஜக நிலை? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Tamil Nadu Exit Poll Results 2024: ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்புகள்(ABP CVoter Exit Poll) வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்.

ABP Cvoter Exit Poll 2024: மக்களவை தேர்தல் 2024இன் 7 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகளின்படி தமிழ்நாட்டில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. குஜராத் மாநிலம் சூரத் மக்களவை தொகுதியில் பாஜகவை தவிர அனைத்து வேட்பாளர்களும் தங்களின் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். எனவே, அங்கு பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன? இதனால் 542 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக இன்று வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
ஏபிபி - சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் 37 முதல் 39 தொகுதிகள் வரை இந்தியா கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 0 முதல் 1 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் இந்தியா கூட்டணியின் ஆதிக்கம்: இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெறும் என ABP-Cvoter கணித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 46.3 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 சதவிகித வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 சதவிகித வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 13.8 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளதால் தேசிய அளவில் இதன் முடிவுகள் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தேனியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வாகை சூடியது. தேனியில் 76,693 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றிபெற்றார்.
கடந்த மக்களவை தேர்தலில், திமுக கூட்டணி 53.15 சதவிகித வாக்குகளும் அதிமுக கூட்டணி 30.56 சதவிகித வாக்குகளும் பெற்றன. பெரும்பாலான தொகுதிகளில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது.
Exit Poll Results 2024 LIVE: பாஜகவா? இந்தியாவா? மக்களின் மனநிலை என்ன? கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது? உடனுக்குடன் அப்டேட்ஸ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

