மேலும் அறிய

TN Election 2026: கூட்டணி உடையப்போவது கன்ஃபார்ம்! திமுக, அதிமுக-விற்கு டாடா சொல்லப்போவது யார்?

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற இன்னும் 10 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுவதால் திமுக - அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வழக்கமான தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தவெக மாபெரும் வெற்றி:

அரைநூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் மாறி, மாறி ஆட்சி செய்து வந்த திமுக மற்றும் அதிமுக-விற்கு எதிராக களமிறங்கிய முதல் தேர்தலிலே ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் தவெக தலைவர் விஜய். 

பெரும்பான்மை?

தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் தற்போது வரை தங்கள் வசப்படுத்தியுள்ளது. இதில் 84 தொகுதிகளில் அதிகாரப்பூர்வமாக வெற்றி உறுதியாகியுள்ளது. 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெற 118 தொகுதிகள் தேவைப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை தங்கள் வசப்படுத்தினாலும், அவர்கள் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 10 தொகுதிகள் தேவைப்படுகிறது. அதேசமயம், விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், அவருக்கு குறைந்தபட்சம் 11 தொகுதிகள் தேவைப்படுகிறது. ஆனாலும், 13 தொகுதிகளாவது இன்னும் தங்கள் வசம் இருந்தால் தமிழக வெற்றிக் கழகத்தால் நெருக்கடியின்றி ஆட்சி அமைக்க இயலும்.

கூட்டணி கட்சிகள்:

தற்போது திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள 

காங்கிரஸ் - 5

இந்திய யூனியன் முஸ்லீம் லீ்க் - 2

இந்திய கம்யூனிஸ்ட் - 1

மார்க்சிஸ்ட் - 2

விசிக - 2

தேமுதிக - 1

ஆகிய இடங்களைப் பிடித்துள்ளனர்.

அதேசமயம், 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள அதிமுக கூட்டணியில் உள்ள 

பாமக - 4

அமமுக - 1

பாஜக -1 

இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

கூட்டணி கணக்கு:

தற்போது விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் வசப்படுத்த தவெக காய் நகர்த்தும். அவ்வாறு காய் நகர்த்தினால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூட்டணி தாவ மிகவும் தயாராக உள்ளனர்.

இவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக ஆகியோர் இணைந்தால் 14 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தவெக-விற்கு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தால் விஜய் சிரமமின்றி ஆட்சியைக் கைப்பற்ற இயலும்.

மேலே கூறிய கட்சியினரில் சில கட்சிகள் கூட்டணிக்கு வரத் தயக்கம் காட்டினால் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக-வையும் கூட்டணிக்குள் கொண்டு வர விஜய் முயற்சிப்பார். பாமக 4, அமமுக 1 என மொத்தம் 5 எம்எல்ஏ-க்களை இவர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். 

உடைகிறது திமுக, அதிமுக கூட்டணி:

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, விஜய் காங்கிரஸ் மற்றும் பாமக-வையே கூட்டணிக்கு பிரதானமாக அழைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்ததன் மூலமாக அவர்களும் தவெக கூட்டணிக்குச் செல்ல வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

விஜய் ஏற்கனவே தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் என்று ஏற்கனவே பொன்னான சலுகையை அறிவித்திருந்ததால் ஆட்சியில் இடம்பிடிக்க ஒவ்வொரு கட்சியினரும் ஆர்வம் காட்டுவார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மூலமாக இந்த கூட்டணி பேச்சுவார்த்தை இன்று இரவே தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று கருதப்படுகிறது.

Vote Percentage 2026: எம்ஜிஆரின் வரலாற்றை முறியடித்த விஜய்! முதல் தேர்தலிலே இத்தனை சதவீதமா?

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Embed widget