மேலும் அறிய

TN Election Results: ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் நிலை என்ன.? அதிமுக, தவெகவிற்கு ஷாக் கொடுத்தார்களா.?

Tamil Nadu Election Results 2026: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் முன்னிலையா.? அல்லது பின்னடைவை சந்தித்துள்ளனர்களா.? என்பதை பார்க்கலாம்.

வாக்கு எண்ணிக்கை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்  4 கோடியே 87 லட்சத்து 99ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. தபால் ஓட்டுக்களை பொறுத்தவரை 5 லட்சத்து 80ஆயிரம் வாக்குகள் பதிவானது. இதனையடுத்து இந்த வாக்குகளை எண்ணும் பணியானது தமிழகம் முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்போது இல்லாத வகையில் இந்த தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டியானது நிலவி வந்த நிலையில், தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக தவெகவின் வருகை திராவிட கட்சிகளை அலறவைத்துள்ளது.

அதிமுக டூ திமுக

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியையடுத்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தனி அணியானது செயல்பட்டு வந்தது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் செயல்பட்டு வந்தனர்.  இதனையடுத்து அதிமுகவில் மீண்டும் சேர ஓ.பன்னீர் செல்வம் எவ்வளவோ முயன்றும் முடியாத நிலை உருவானது. இதனையடுத்து திமுகவில் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் இணைந்தனர். 

ஓபிஎஸ் நிலை என்ன.?

இவர்களுக்கு தேர்தலில் போட்டியிட திமுக தரப்பும் சீட் வழங்கியது. அந்த வகையில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்கினார். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் நாராயணசாமி, தவெக சார்பில் பிரகாஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலை அரசு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக களம் இறங்கியுள்ள ஓ.பன்னீர் செல்வம் 10 வது சுற்று முடிவில் 487 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். 

Tamil Nadu Election Results 2026 LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை லைவ்

வைத்தியலிங்கம் முன்னிலையா.?

இதே போல ஒரத்தநாடு தொகுதியில் திமுக சார்பாக வைத்தியலிங்கம் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் எம். சேகர், தவெக சார்பில் டாக்டர் அரவிந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் திருமுருகன் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 18ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

மனோஜ் பாண்டியன் நிலை என்ன.?

அடுத்தாக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் KRP பிரபாகரன், நாம் தமிழர் கட்சி R பால்ராஜ், தமிழக வெற்றி கழகம் சார்பில் விபின் சக்கரவர்த்தி போட்டியில் உள்ளனர்.  இதில் அதிமுக வேட்பாளர்  பிரபாகரன் 196 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget