மேலும் அறிய

Lok Sabha Election 2024: சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு

திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் வேட்புமனு பரிசீலனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் 39 பேர்கள் சார்பாக ஆதரவாளர்களும், வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சேலம்நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக டி.எம்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்த டி.எம்.செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதிக்கு சேலம் மேற்கு மற்றும் வடக்கு தொகுதியில் என இரண்டு இடத்தில் வாக்கு இருப்பதாக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதற்கான உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி தற்காலிகமாக செல்வகணபதி வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டிஎம்.செல்வகணபதிக்கு அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் புகாரிற்கு விளக்கம் அளிக்க 3 மணி வரை அவகாசம் கேட்ட நிலையில் இரண்டு மணி வரைக்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவகாசம் கொடுத்தார்.இந்தப் புகார் குறித்து உரிய விளக்கம் எழுத்துப்பூர்வமாக திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து சேலம் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் டிஎம்.செல்வகணபதி வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தங்கள் தரப்பு விளக்கத்தை செல்வகணபதியின் வழக்கறிஞர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்தனர். இதையடுத்து திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளில் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Lok Sabha Election 2024: சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு

பின்னர் திமுக மூத்த வழக்கறிஞர் விடுதலை அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, செல்வகணபதி அவர்களின் மனு ஏற்றுக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிமுக வழக்கறிஞர்கள் செல்வகணபதி அவர்களின் பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ளது என்றும், இது தவிர அவர் மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து முழுவதும் வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்து, அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய தெரிவித்திருந்தனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, உரிய ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினோம். சேலம் மேற்கு தொகுதியில் இருந்து வீடு மாற்றும் போதே ஏற்கனவே நீக்கல் படிவம் அவர் கொடுத்துள்ளார்.

மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும் முன்வைத்து பேசினோம். எனவே அதனை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். மேலும் சொத்து தொடர்பாக நாங்கள் ஏதும் மறைக்கவில்லை என்று தெரிவித்து அதற்குரிய ஆவணங்களையும் வழங்கி இருந்தோம். இதனை ஏற்று தேர்தலில் போட்டியிட வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என திமுக வழக்கறிஞர் விடுதலை செய்தியாளரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறும் போது, வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதன் பிறகு எதுவாக இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகுதான் நீதிமன்றம் சென்று அணுக முடியும் என்றார்.

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget