மேலும் அறிய

மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !

மதுரை தெற்கு தொகுதியில் இராம ஸ்ரீநிவாசனுக்கு சீட், களம் எப்படி இருக்கும் - தெரிந்த முகமாக இவர் முழு விவரம்.

2026- தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏரத்தாள எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவிட்டது. இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக தெற்கு தொகுதியை குறிவைத்துவரும் இராம ஸ்ரீநிவாசனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
 
யார் இந்த ஸ்ரீநிவாசன்
 
இராம ஸ்ரீநிவாசன் இவர் மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராமசாமி ரெட்டியார் - தாயார்  ருக்மணி அம்மாள். இவரது மனைவி திலகாஸ்ரீ பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இராம ஸ்ரீநிவாசன் அவர்கள் கல்லுப்பட்டியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பட்டப் படிப்பை தொடர்ந்தவர், BSNL என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் ஒரு தொலைபேசி இயக்குனராக தனது பணியை தொடங்கி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர ஆய்வாளராக பதிவு செய்து 2007 ஆம் ஆண்டு காந்திய தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.
 
கிரானைட் குவாரிகளுக்கு எதிராக போராட்டம்
 
அதன் பின்பு தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறையில் உதவி பேராசிரியராக பணி புரிந்தார். 1985 முதல் RSS இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்த இயக்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். 1995 முதல் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை அமைப்பாளராக செயல்பட்டார். 2016 முதல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 2020 முதல்(2026 இன்று வரை) மாநில பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். 2016 திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர். 2024 மதுரை நாடாளுமன்றத்தின் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு இரண்டு லட்சத்து இருபத்தொண்றாயிரம் (2,21,000) வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் வந்தார். அதிமுகவை முந்தி அதிக வாக்குகள் பெற்றதால் தற்போது சட்ட மன்ற தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தெற்கு தொகுதியில் செளராஷ்ட்ரா மக்கள் இருப்பதால் அவர்கள் வாக்கு கிடைக்கும் என நம்புகிறார். தேசிய சிந்தனையிலும் ஹிந்துத்துவ சித்தாந்தத்திலும் ஊறித் திளைத்த இராம ஸ்ரீநிவாசன் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த முகமாக பார்க்கப்படும் தலைவர் இராம ஸ்ரீநிவாசன் இருக்கிறார். மீண்டும் கிரானைட் கல்குவாரி செயல்பட வேண்டும் என கிரானைட் முதலாளிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது, இவருக்கு பின்னடைவாக அமைந்தது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget