மேலும் அறிய

VVPAT: இவிஎம்முடன் விவிபாட் முறையைக் கட்டாயமாக்கக் கோரி மனு- உயர் நீதிமன்றம் மறுப்பு

மின்னணு திரையில் விவிபாட் இயந்திரத்தில் 7 நொடிகளுக்குத் தோன்றும். இதன்மூலம் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை விவிபாட் எனப்படும் மின்னணு ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய மனுவை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் முதற்கட்டத் தேர்தல்?

நாடாளுமன்றத் தேர்தல் நாளை தொடங்க உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட, 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில்  முதற்கட்ட வாக்குப்பதிவில் 8 தொகுதிகளுக்கும் 29 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும் மட்டும் முதற்கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள 48 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 14 தொகுதிகளில் ஐந்து தொகுதிகளுக்கும் மற்றும் உத்தரகாண்டில் மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கும்  முதற்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. 

இதையடுத்து பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மூன்று தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மணிப்பூர், மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில்  உள்ள தலா இரண்டு தொகுதிகளுக்கும் முதல்கட்ட தேர்தலின்போதே வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

திரையில் தோன்றும் ஒப்புகைச் சீட்டு முறை

இவிஎம் மூலம் வாக்களிப்பதன் மூலம். நாம் யாருக்கு வாக்களித்தோம் என்னும் விவரம் மின்னணு திரையில் விவிபாட் இயந்திரத்தில் (மின்னணு ஒப்புகைச் சீட்டு) 7 நொடிகளுக்குத் தோன்றும். இதன்மூலம் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும். எனினும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே விவிபாட் முறை பயன்பாட்டில் உள்ளது. இந்த முறையைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கமிலஸ் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

எனினும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது என்று சஞ்சய் கங்காபூர்வாலா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget