Nilgiris Election Results 2024: 4.73 லட்சம் வாக்குகள் பெற்று நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி!
Nilgiris Election Results 2024: 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தனி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பில் முருகன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலில் நீலகிரி தனி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா 4,73,212 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
தி.மு.க., ஆ.ராசா - 4,73,212
பா.ஜ.க., எல். முருகன் - 2,32,627
அ.தி.மு.க., லோகேஷ் தமிழ்ச் செல்வன் - 220230
நா.த.க., ஜெயக்குமார் - 58821
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரியில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மக்களவை தொகுதி:
தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உருவாக்கப்பட்ட 19வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, மேட்டுப்பாளையம், அவினாசி (தனி), தொண்டாமுத்தூர், குன்னூர் (தனி), உதகமண்டலம், கூடலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு, பொதுத்தொகுதியாக இருந்த நீலகிரி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.
2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தனி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பில் முருகன், நாம் தமிழர் சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இதுபோக, மேலும் 16 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார்..?
கடந்த 2019 மக்களவை தேர்தலில், 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 6 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆ. ராசா, அதிமுக வேட்பாளரான தியாகராஜனை 2,05,823 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்காளர்கள் விவரம்:
நீலகிரியில் மொத்தமாக 14,28,387 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் - 7,40,742, பெண்கள் - 6,83,528, மூன்றாம் பாலினத்தவர்கள் - 93 பேர்கள் உள்ளனர். அதில் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் 9,67,694 பேர் மட்டுமே ஆகும். அதில், ஆண்கள் - 4,97,180, பெண்கள் - 5,16,193, மூன்றாம் பாலினத்தவர்கள் - 37 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம், 70.95% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.