மேலும் அறிய

Seeman: எங்க பாதுகாப்பு பற்றி பேச மாட்டிங்களா? - சீமானை சுற்றி வளைத்து பெண்கள் சரமாரி கேள்வி!

முதலாளிகளுக்கான அரசியல், அதிகாரம் தான் நீண்ட காலமாக கட்டமைக்கப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் சினிமா இருக்கிறது. ஆனால் நடிகனை யாரும் நாடாள அழைப்பதில்லை என சீமான் கூறியுள்ளார்.

நான் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு 100 சதவிகிதம் பாதுகாப்பு வழங்குவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்துள்ளார். 

ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்து களம் காண்கிறது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான், தொடர்ந்து திருத்தணியில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அந்த தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான நாகம்மாளுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், ஒரு புரட்சிக்கர அரசியல் மாறுதலுக்காக 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நாட்டில் நெருங்காலமாக உரிமை,உடமை, உயிரை இழந்து ஒரு எளிய நிலையில் இருக்கும் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கு கடைசியாக இருக்கும் வாய்ப்பு அரசியல் விடுதலை தான். 

அதற்கு இருக்கும் ஒரு வாய்ப்பு தேர்தல் களம். அதனால் 2016 தொடங்கி 2026 வரை 10 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். ஒரு ஆகச்சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது எங்களின் பெரும் கனவாகும். அதனை கருத்தாக கொண்டு சேர்க்க முடிவு செய்தபோது அது சரியாக சென்று சேரவில்லை. தமிழ்நாட்டில் நாம் ஏற்றுக்கொண்ட  பொருளாதாரம், நாடு ஏற்றுக் கொண்டிருப்பது சந்தைமயம். இதில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் ஆகும். தனியார் மயமாகி விட்டால் நாடு சந்தையாகி விடும்.

மக்களும் விற்பனை பண்டமாகி விடுவார்கள். அரசு தரமாக ஒன்றை கொடுத்து விட்டால் தனியார் முதலாளி பாதிக்கப்படுவார்கள். முதலாளிகளுக்கான அரசியல், அதிகாரம் தான் நீண்ட காலமாக கட்டமைக்கப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் சினிமா இருக்கிறது. ஆனால் நடிகனை யாரும் நாடாள அழைப்பதில்லை. மேக்கப்பை கலைத்த உடனேயே அதிகாரத்தை தர வேண்டும் என சொல்கிறார்கள் என சீமான் தெரிவித்தார்.

அப்போது கீழே நின்றிருந்த பெண்கள் இருவர் சீமானிடம் சரமாரியாக முறையிட்டனர். எங்கள் வாக்குகளை நாங்கள் உங்களுக்கே போடுகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் 2 வயசு குழந்தைக்குகூட பாதுகாப்பில்லை. அதைப்பற்றி எல்லாம் நீங்கள் பேசவே இல்லை என கேள்விகளை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்திய சீமான் நான் ஆட்சிக்கு வந்ததும் இதையெல்லாம் செய்வேன்.  100 சதவிகிதம் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன். இல்லாவிட்டால் நடுத்தெருவில் வைத்து கேள்வி கேளுங்கள் என உறுதியளித்தார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget