மேலும் அறிய

மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?

மனுத்தாக்கல் செய்ய வந்த இடத்தில் எம்பி சுதா கோட்டாட்சியர் அலுவலக படிக்கட்டில் அமர்ந்து காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது, தேர்தல் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி காவல்துறையினர் தடுத்ததால் ஏற்பட்ட குழப்பமும், நாடாளுமன்ற உறுப்பினர் படிக்கட்டில் அமர்ந்து காத்திருந்த சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரவாரத்துடன் வந்த கூட்டணி கட்சிகள்

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ், இன்று தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் அறைக்குள் வேட்பாளர் உட்பட ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

காவல்துறையின் கட்டுப்பாடும் நிர்வாகிகளின் சிக்கலும்

வேட்புமனுத் தாக்கலுக்காக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் சென்றனர். அப்போது நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் காரணமாக, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பானுசேகர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் விட்டுக்கொடுப்பும் காவல்துறை மறுப்பும்

உள்ளே சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சுதா, கட்சி அமைப்பின் முக்கியத்துவத்தைக் கருதி, மாவட்டத் தலைவர் பானுசேகர் உள்ளே இருப்பது அவசியம் என உணர்ந்தார். உடனடியாக வெளியே வந்த அவர், தனக்கு பதிலாக மாவட்டத் தலைவர் பானுசேகரை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை ஏற்று பானுசேகர் உள்ளே சென்றார்.

இதனைத் தொடர்ந்து, கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிலர் நாடாளுமன்ற உறுப்பினரை (MP) மீண்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். "மக்கள் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினரை உள்ளே அனுமதிக்க வேண்டும்" என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தும், ஐந்து பேர் என்ற எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி காவல்துறையினர் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற அலுவலகத்திற்கு வெளியே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

படிக்கட்டில் அமர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்

காவல்துறையினரின் பிடிவாதமான போக்கினாலும், உள்ளே சென்ற கூட்டணி நிர்வாகிகள் யாரும் உடனடியாக வெளியே வராத காரணத்தினாலும் ஒரு இக்கட்டான சூழல் நிலவியது. ஒருவழியாக கூட்டணி கட்சி சேர்ந்த வேறு ஒருவரை வெளியில் அனுப்பி விட்டு அதன் பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த எம்பி அமர இருக்கை இல்லாததால் அவர் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் கோட்டாட்சியர் அலுவலகத்தின் மாடிப்பகுதியில், வேறு வழியின்றி தனியாக படிக்கட்டில் அமர்ந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் அலுவலக படிக்கட்டில் அமர்ந்திருந்த காட்சி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

பின்னர் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அனைத்து சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பிறகு, கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அதிகாரியிடம் வேட்பாளர் ஜமால் முகமது யூனுஸ் தனது வேட்புமனுவை முறையாகத் தாக்கல் செய்தார்.  

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
மனுத்தாக்கல் செய்யச் சென்ற இடத்தில் எம்பி-க்கு நேர்ந்த சங்கடம்: மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
TN Election 2026: கோவையில் மோதல் முடிவுக்கு வந்ததா? அண்ணாமலையுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்
TN Election 2026: கோவையில் மோதல் முடிவுக்கு வந்ததா? அண்ணாமலையுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்த வானதி சீனிவாசன்
குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்ட ஜெயலலிதா? வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் கடவுள் முருகன் - திருப்பத்தூர் தேர்தல் அட்ராசிட்டி
குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்ட ஜெயலலிதா? வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் கடவுள் முருகன் - திருப்பத்தூர் தேர்தல் அட்ராசிட்டி
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
Ranipet Dmk Candidate : சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
சீட்டுக்காக அடம்பிடிக்கும் காந்தி.. வழியில்லாமல் விட்டுக்கொடுத்த மகன்- ராணிப்பேட்டை திமுகவில் நடப்பது என்ன.?
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி
Trump Iran War Ceasefire: அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
அமெரிக்கா-ஈரான் இடையே 45 நாட்கள் போர் நிறுத்தம்.? கடைசி நிமிட பேச்சுவார்த்தை; நடந்தா நல்லது தான்.!
Embed widget